அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.. பங்குகள் சரிவு!

Su.tha Arivalagan
Nov 21, 2025,03:21 PM IST

- கலைவாணி கோபால் 


மும்பை: ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில்  அம்பானியின் சொத்துக்கள் மீண்டும் அமலாக்கத்துறையினால் முடக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன 


2010 இல் இருந்து 2012 வரை இந்தக் குழுமத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணப்பரிமாற்றத்தின் போது கிட்டத்தட்ட 150 கோடி வங்கிகளில் பணம் வாங்கி திரும்ப செலுத்தவில்லை என்று ஒன்பது வங்கிகள், ரிலையன்ஸ் குழுமத்தின் மீது  குற்றம் சாட்டி உள்ளன. 


மேற்கொண்டு 17 ஆயிரம் கோடி தற்போது வெளிநாட்டு பரிமாற்றம் அடிப்படையில் போலியாக பரிவர்த்தனை செய்யப் பட்டு இருக்கின்றது . என்பதை கண்டறிந்து அமலாக்கத் துறையினர் பண மோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் மீது இரண்டு வழக்குகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. 




இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் 1456 கோடி  சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை தகவல்களின்படி, நவீன் அம்பானியின் அறிவு நகரம், மில்லேனியம் பூங்கா, புவனேஸ்வரில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள், நிறுவனங்கள் என கிட்டத்தட்ட  9 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அமலாக்கத்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து அனில் அம்பானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவடையத் தொடங்கியுள்ளது.


(கலைவாணி கோபால், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)