Anna university case: இதுக்குமா ஸ்டிக்கர் ஒட்டுவது.. முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில்

Su.tha Arivalagan
May 28, 2025,02:38 PM IST

சென்னை: தான் ஒரு பொம்மை முதலமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார் மு.க.ஸ்டாலின் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கின் தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை வெளியிட்டிருந்தார். அந்தக் கருத்துக்கு தற்போது முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது?  அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே?




உங்கள் காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்ததா?  அப்படியென்றால், உங்களுக்கோ,  உங்கள் அரசுக்கோ துளியும் சம்மந்தம் இல்லாமல், அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய SIT விசாரணையை நீங்கள் Influence செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?


குற்றங்கள் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து நீங்கள் கூறி வந்தும் இத்தனை குற்றங்கள் நடக்கிறது என்றால், நீங்கள் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? இன்றைய குற்றவாளி உங்கள் திமுக அனுதாபி ஞானசேகரன்! கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ட்வீட் போடாதீர்கள் என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!


"SIR"-ஐக் காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்டநீதிக்கும் - பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரான ஆட்சி! இந்த ஆட்சி வீழும்!

மக்களுக்கான  அதிமுக  ஆட்சி அமையும்! அந்த "SIR"-ம், சாருக்கு பின்னால் உள்ள எல்லா சார்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.