திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்றார் எடப்பாடி பழனிச்சாமி.. சி.வி.சண்முகம் பரபரப்புப் பேட்டி
சென்னை: எந்தத் திமுகவை எதிர்த்து கடந்த 53 வருடமாக அரசியல் செய்து வருகிறோமோ அந்த திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பினார் எடப்பாடி பழனிச்சாமி. அதை நாங்கள் ஏற்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெக ஆட்சியமைக்க முயன்று வந்த நிலைியல், திமுகவும், அதிமுகவும் கூட்டாக சேர்ந்த ஆட்சியமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இது முதலில் வதந்தியாக கருதப்பட்டது. ஆனால் அப்படி ஒரு நடந்தது, முயற்சி நடந்தது உண்மை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி வெளிப்படையாக சொன்னபோது தமிழ்நாடே அதிர்ந்தது.
திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகள் மீதும் அபிமானம் வைத்துள்ள பலரும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி வெளியான பிறகுதான், தவெகவுக்கு இருந்து வந்த அழுத்தம் குறைந்தது. திமுக கூட்டணியிலிருந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க முன்வந்தன. தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவாக வந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை வைத்து தற்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் 30 எம்எல்ஏக்கள் தனி அணியாக மாறியுள்ளனர். இதில் வேலுமணி சட்டசபை கட்சித் தலைவராகவும், கொறடாவாக சி.விஜயபாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் அவர் ஒரு மனுவையும் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை இந்த அணியினர் கூட்டாக சந்தித்தனர். அப்போது சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல அதிமுக கூட்டணியும் தோல்வி அடைந்திருக்கிறது. அதிமுக என்ன செய்யப் போகிறது. இயக்கத்தை கப்பாற்ற வேண்டும் நிலை நிறுத்த வேண்டும். எம்ஜிஆர் ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் எம்எல்ஏக்களும் உள்ளோம். ஆகவே இன்றைக்கு தமிழக மக்கள் சட்டசபைத் தேர்தலில் தவெக வுக்கு குறிப்பாக முதல்வர் விஜய்க்கு மக்கள் வாக்களித்துள்ளனர். முதல்வராக வர வேண்டும் என்று தெளிவாக வாக்களித்துள்ளனர். அதை அதிமுக தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறது.
அதிமுக கலந்து ஆலோசித்தபோது, பொதுச் செயலாளர் சில முன்மொழிவுகளை முன்வைத்தார். இந்த இயக்கம் தொடங்கப்பட்டது திமுகவை எதிர்த்து. திமுகவை எதிர்த்து தொடங்கப்ப்ட இயக்கம் இது. 53 ஆண்டு காலமாக திமுகவை எதிர்த்து நாங்கள் அரசியல் செய்து வருகிறோம். 2 தலைமுறைகளாக நாங்கள் அதிமுகவில் செயல்பட்டு வருகிறோம்.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் எங்களிடம் முனவைக்கப்பட்டது என்னவென்றால் திமுக ஆதரவோடு, எந்த திமுகவை எதிர்த்தோமா அந்தத் திமுகவின் ஆதரவோடு, அதிமுக என்னை முதல்மைச்சராக தேர்வு செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். அதற்கு நாம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னபோது, பெரும்பாலான எம்எல்ஏக்கள், உண்மையில் அனைத்து எம்எல்எக்களுமே அந்த முன்மொழிவுக்கு சம்மதிக்கிவில்லை. உண்மையில் பேரதிர்ச்சிக்குள்ளானோம்.
எப்படி இதையெல்லாம் சொல்கிறார், எந்த எண்ணத்தில் கொண்டு வந்தார். திமுகவோடு கூட்டணி சேர்ந்தால் அதிமுக இல்லாமல் போய் விடும் என்றாோம். இது தவறு, வேண்டாம் என்று சொன்னோம். அதை ஏற்க மறுத்தார்கள். ஒப்புக் கொள்ளவில்லை.
இதன் காரணமாக இந்த இயக்கத்தக் கட்டிக் காப்பதற்காக அதிமுக பெரும்பான்மை எம்எல்ஏக்கள் கூடி எங்களது குழுத் தலைவராக சிவி.வேலுமணியைத் தேர்வு செய்துள்ளோம். கொறடாவாக சி.விஜயபாஸ்கரை தேர்வு செய்துள்ளோம்.
பொதுக்குழுவைக் கூட்டி தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட கோரிக்க வைக்கிறோம். கூட்டுவார் என்று நம்புவோம்.
மக்கள் விரும்பிய மக்கள் வாக்களித்த முதல்வர் ஜோசப் விஜய்க்கும், தவெக அரசுக்கும் எங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் சி.வி.சண்முகம்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், தயவு செய்து அதிமுகவை பிரிக்கப் போகிறோம், அதிமுகவில் பிளவு என்று செய்திகள் போடாதீர்கள். அதிமுகவில் ஆரம்பத்திலிருந்து இருப்பவர்கள் நாங்கள். அதிமுகவில்தான் இருப்போம். ஒற்றுமையாக இருப்போம். அதிமுகவை பிரிக்க நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம். விவாதிக்கக் கோருகிறோம், அவ்வளவுதான். தொடர்ந்து தோல்விகளைப் பெற்று வருகிறோம். அதற்கான காரணம் ஆராயப்பட வேண்டும். சரி செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றார் அவர்.