ஓதாத கல்வி கெடும்.. ஔவையின் பொன்மொழி 60 (4)

Su.tha Arivalagan
Oct 13, 2026,04:51 PM IST

- கவிக்கடல் அ.ல.ஏகலைவன்


நேரிசை வெண்பாவில் அவ்வையின் 60 ஆத்தி சூடி மொழிகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கவிக்கடல் அ.ல.ஏகலைவன் தொகுத்துத் தரும் ஆத்தி சூடி மொழிகளில் இன்று அடுத்த இரு பாடல்களைப் பார்க்கலாம்.


பெற்றெடுத்த பிள்ளைக்கு கற்றுணர்த்த நித்தமும்

பற்றுடனே ஏற்றுப் பயிற்றுதல் - நற்கிருபை

தோதாக நாள்தோறும் தொட்டதெலாம் மேலோங்க  

ஓதாத கல்வி கெடும்


விளக்கவுரை:




பெற்றெடுத்த பிள்ளைக்கு கற்றுக் கொடுத்த 

கல்வியை நாள்தோறும் ஓதாமல் விட்டுவிட்டால் 

அக்கல்வியும் கெடும்.


--


ஆயிரம் செல்வங்கள் அண்டிவரும் ஆனாலும் 

தாயினம்போல் தண்பொழுகி தந்திடல்- நேயம் 

கெழுதகையாய் வாழ்வொழுக்கம் கேடேற்றால் வீணே

ஒழுங்கில்லா வாழ்வும் கெடும்


ஆயிரம் செல்வங்கள் அருகில் இருந்தாலும் தாய்மை ஒழுக்கப் பண்போடு அவற்றை ஆளுதல் நன்மை. அல்லால் ஒழுக்கம் அறியாத அச்செல்வத்தால்; வாழ்வும் கெடும்.


(மதிப்புறுமுனைவர் கவிக்கடல் அ.ல.ஏகலைவன், கிராம நூலகர், பிடாகம் ஊராட்சி, எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்)