தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23ல் தேர்தல்.. புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி பொதுத் தேர்தல் !
டில்லி : தமிழ்நாடு, கேரளா, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது.
அதன்படி தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறும். அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி மாநில சட்டசபைகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் 2026
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 30
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் - ஏப்ரல் 6
வேட்பு மனுக்கள் பரிசீலனை - ஏப்ரல் 7
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் - 9
வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை - மே 4
தமிழ்நாடு, கேரளா,புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள நடப்பு சட்டசபைகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்கான தேர்தல் தேதியை இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 4 மாநிலங்களில் ஒரே கட்டமாக, தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். அதற்கு பிறகு இந்த மாநிலங்களில் அரசு தொடர்பான எந்த ஒரு முடிவுகளை எடுப்பதற்கும் தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டியது அவசியமாகி விடும்.