தாய்!!!

Su.tha Arivalagan
Sep 08, 2025,03:22 PM IST

- தீபா ராமானுஜம்


என் கருணை தெய்வமே!!


நான் உருவான போது உவகை அடைந்தாய்...


கருவான என்னை கண்களாய் காத்தாய்...


பிரியமாய் நீ உண்ட உணவையெல்லாம்...

பிள்ளை என் நலம் காக்க பிரியவும் துணிந்தாய்...


வேதனை தரும் வலிகளைப் பொறுத்தாய்...

வயிற்றில் நான் உதைத்தால் ஆனந்தம் கொண்டாய்...



ஐயிரண்டு மாதங்கள் அலுக்காமல் சுமந்தாய்...

நலமாக நான் பிறக்க அனைத்தையும் செய்தாய்...


நான் ஜனித்த நேரம் மறு ஜன்மம் கண்டாய்...

உயிர் பெற்று நான் வாழ உன் உதிரம் கொடுத்தாய்...


நான் பிறந்த பின்னாலும் எனக்காக உழைத்தாய்...

உணவுகளை மருந்துகளை தவறாது கொடுத்தாய்...


நான் வாழ பலவித தியாகங்கள் செய்தாய்...

நன்றியுடன் நான் உனக்கு எது செய்தாலும் ஈடாகுமா... என் தாயே!!!


இருந்தாலும் என் தாயை மகிழ்வுடன் வைக்க 

என்னால் இயன்றதை செய்திடுவேன்...

இறைவனின் அருளோடு!!!