14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
அ. சீ. லாவண்யா
மெல்போர்ன்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கிரிக்கெட் வரலாற்றை மறுபடியும் எழுதும் வகையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியானது ஆஷஸ் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு பெரும் நம்பிக்கையையும் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் பெரும் மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் ஆஸ்திரேலியாவை அழுத்தத்தில் வைத்தது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய தருணங்களில் ரன்களை சேர்த்தனர். குறிப்பாக நடுத்தர வரிசை வீரர்களின் நிலையான பங்களிப்பு அணியின் ஸ்கோரை உயர்த்தி, ஆஸ்திரேலியாவுக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஏற்பட்ட இந்த தோல்வி ஆஸ்திரேலிய ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அதே சமயம், இங்கிலாந்து அணிக்கு இது ஒரு வரலாற்றுச் சாதனையாகவும், தொடரில் புதிய திருப்பமாகவும் அமைந்துள்ளது. இந்த வெற்றியுடன் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி புதிய நம்பிக்கையுடன் முன்னேறியுள்ளது.
(அ. சீ., லாவண்யா தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)