இந்தியாவின் தெறி ஆட்டம்.. இறுதிப் போட்டிக்குப் போக .. இங்கிலாந்துக்குத் தேவை 254 ரன்கள்!
Mar 05, 2026,08:51 PM IST
மும்பை: 2026 ஆம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் விறுவிறுப்பான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் இந்தியா பேட் செய்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன், இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் வெறும் 42 பந்துகளில் 89 ரன்கள் (7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) குவித்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
மறுபக்கம், இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்களும், திலக் வர்மா ஆட்டத்தின் இறுதியில் அதிரடியாக விளையாடி ரன் வேகத்தை உயர்த்தினர்.
சஞ்சு போன இடைவெளியை ஈடுகட்டும் வகையில் இருந்தது ஷிவம் தூபேவின் அதிரடி. சிக்ஸர்களாக விளாசித் தள்ளிய ஷிவம் தூபே, 25 பந்துகளில் 43 ரன்களைக் குவித்தார்.
கடைசி ஓவர்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை 250 கடக்கச் செய்தது.
இங்கிலாந்து தரப்பில், வில் ஜேக்ஸ் மற்றும் ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.