Tamil Poem: என்னவள்!
Jul 04, 2026,03:14 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
கவிஞன் நான் ஓர்
கவிதை கண்டேன்!
கண்மணி அக்கவிதையின்
ரசிகன் ஆனேன்!
பெண் மயில் அவளின்
தலைவன் ஆனேன்!
காலம் தந்த பரிசில்
மகிழ்ந்து போனேன்!
சித்திரம் போல் ஒரு
இனிமை!
சிரிப்பதில் கொண்டாள்
தனித்தன்மை!
ஆகாய வானில் பல
நட்சத்திரம்!
என் இல்லற வானில்
இவளே ஒரே காவியம்!
கடவுளைக் காணாத
எனக்கு
இவளே என் மனதின்
கிழக்கு!
நான் பண்ணிய புண்ணியம்
எதுவோ?
அதன் பலன்தான் இவள் என்
துணையோ?
இந்த இராமனின் ஜானகி
இவளோ!
அந்த தசரதன் தலைமகன்
நானோ!
என் வாழ்க்கைக் கடலின்
மாலுமி ஆனாள்!
கரை சேரும் என் கப்பலும்
ஓர் நாள்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).