மயங்காத தமிழ்!

Su.tha Arivalagan
Sep 28, 2026,05:41 PM IST

- ஈரோடு மாலதி

தமிழ் மொழி! தமிழ் மொழி!
தமிழ் மொழி! தமிழ் மொழி!
எங்கள் மொழி தமிழ் மொழி!
எங்கள் உயிர்மொழி தமிழ் மொழி!

தமிழ் மொழி எங்கள் மூச்சு!
தமிழ் மொழி எங்கள் வாழ்க்கை!
தமிழ் மொழி எங்கள் பேச்சு!
தமிழ் மொழி எங்கள் சமுதாயம்!

தமிழ் மொழி எங்கள் கலாச்சாரம்!
தமிழ் மொழி எங்கள் வழிபாடு!
தமிழ் மொழி எங்கள் ஆசீர்வாதம்!
தமிழ் மொழி எங்கள் வரலாறு!

தமிழ் மொழி எங்கள் மாணவ மாணவியரின் ஒழுக்கம்!
தமிழ் மொழி எங்கள் நேசம்!
தமிழ் மொழி எங்கள் பாரத நாடு!
தமிழ் மொழி எங்கள் வையகம்!

தமிழ் மொழி எங்கள் பண்பாடு!
தமிழ் மொழி எங்கள் தெய்வங்களின் வரலாறு!
தமிழ் மொழி எங்கள் வேதம்!
தமிழ் மொழி எங்கள் கீதம்!
தமிழ் மொழி எங்கள் தேசியக் கொடி!
தமிழ் மொழி எங்கள் பாரதத்தின் பெருமை!


உலகத் தாய்மொழிகளுள் தொன்மையும் சிறப்பும் கொண்ட மொழியாகத் திகழ்வது நம் தமிழ் மொழி. தனிச்சிறப்பு வாய்ந்த செம்மொழியான நம் தமிழுக்கு எண்ணற்ற பெருமைகள் இருக்கின்றன.

நம் தமிழ் மொழியின் எழுத்து முறைக்கும், வேறு எந்த மொழியின் எழுத்து முறைக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதுதான் மயங்காத மரபின் எழுத்துமுறை.

தமிழ் எழுத்துமுறை மயங்காதது என்பதன் மகத்துவத்தை நமக்கு எடுத்துரைப்பது தொல்காப்பியம்.

தொல்காப்பியத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பாயிரம் பாடியவர் பனம்பாரனார். அவருடைய பாயிரத்தில்,

“முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கறு பனுவல்”

என்றும், தமிழ் மரபின் சிறப்பை எடுத்துரைக்கும் பல கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

தமிழ் எழுத்து முறையில் மயக்கம் இல்லாத தன்மை என்பது தமிழின் மிக முக்கியமான சிறப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தச் சிறப்பை விளக்க வேண்டுமென்றால், பிற மொழிகளின் எழுத்து மற்றும் உச்சரிப்பு முறைகளில் காணப்படும் மாறுபாடுகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இதனைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள சில ஆங்கிலச் சொற்களைக் கவனியுங்கள்.

debut, tsunami, listen போன்ற ஆங்கிலச் சொற்களை எழுதுவது போலவே அவற்றை உச்சரிப்பதில்லை. சில எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தாலும், அவை உச்சரிப்பில் ஒலிக்காமல் போகின்றன. இதுவும் ஒரு வகையான எழுத்து–ஒலி மயக்கமாகும்.

அதேபோல், ஆங்கிலத்தில் week – weak போன்ற ஒரே மாதிரியான உச்சரிப்பைக் கொண்ட, ஆனால் வெவ்வேறு பொருள்களைக் கொண்ட சொற்களும் உள்ளன. இவை homophones என்று அழைக்கப்படுகின்றன.

இவ்வாறான எழுத்து–ஒலி வேறுபாடுகள் ஆங்கிலத்தில் பல இடங்களில் காணப்படுகின்றன.

தமிழில், பொதுவாக ஒரு சொல்லை அதன் எழுத்துகளின் அடிப்படையில் எவ்வாறு எழுதுகிறோமோ, அதற்கேற்பவே அதன் ஒலிப்பையும் அமைத்துக் கொள்கிறோம். இதுவே தமிழ் எழுத்து முறையின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.

தமிழ் மொழியின் இந்தச் சிறப்பை உணர்ந்தால்தான், “மயங்காத மரபின் எழுத்துமுறை” என்ற கருத்தின் ஆழத்தையும் பெருமையையும் புரிந்துகொள்ள முடியும்.

தமிழின் எழுத்து மரபு, அதன் தொன்மை, இலக்கண அமைப்பு, ஒலியியல் தன்மை ஆகியவை தமிழுக்கு உலக மொழிகளிடையே தனித்துவமான இடத்தை வழங்குகின்றன.

அதனால்தான் நாம் பெருமையுடன் கூறலாம்:

தமிழ் மொழி — எங்கள் மொழி!
தமிழ் மொழி — எங்கள் உயிர்மொழி!
தமிழ் மொழி — எங்கள் மூச்சு!
தமிழ் மொழி — எங்கள் வாழ்வு!

மயங்காத தமிழ்!
மங்காத தமிழ்!
என்றென்றும் வாழ்க தமிழ்!

(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)