மஞ்சள் மாநகரம் ஈரோடு மாநகரின் மாபெரும் பெரிய மாரியம்மன் திருவிழா
- ஸ்வர்ணலட்சுமி
ஈரோடு: ஈரோடு மாநகரில் ப்ரஃப் ரோட்டில் 1200 வருடங்கள் மிகவும் பழமையான, கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுடன் இணைந்த சின்ன மாரியம்மன் கோவில் பெரியார் வீதியில் அமைந்துள்ளது.இந்த இரு கோவில்களுக்கு இடையில் வாய்க்கால் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
ஆகையால் இந்த கோவில் நடுமாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. பெரிய மாரியம்மன்,சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் திருவிழாக்கள் இணைந்து இந்த மஞ்சள் மாநகரின் மாபெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இக்கோவில்களில் தற்போது பங்குனி குண்டம் திருவிழா நடந்து வருகிறது.
மூன்று கோவில்களையும் இணைந்து திருவிழாக்கள் நடப்பதால் ஊரே விழா கோலம் பூண்டு கோலாகலமாக காணப்படுகிறது.
மார்ச் 17,20 26 அன்று பூ சாட்டுதலுடன் தொடங்கி ஏப்ரல் மாதம் தொடக்கம் வரை வெகு விமர்சையாக இந்த மாபெரும் திருவிழா நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் நடைபெறும் இவ்விழாவில் கம்பம் நடுதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை,குண்டம் பூ இறங்குதல் மற்றும் மஞ்சள் நீர் விழா ஆகியவை முக்கிய நிகழ்வுகள் ஆகும்.
பெரிய மாரியம்மன் திருக்கோவில் 20 26 ஆம் ஆண்டு திருவிழா நிகழ்ச்சி நிரல்:
17.03.2026 செவ்வாய் பூச்சாட்டுதல்
21.03.2026 சனி கம்பம் நடுதல்.
26.03.2026 வியாழன் கொடியேற்றம்.
31.03.2026 செவ்வாய் குண்டம் பூ இறங்கும் விழா, மாவிளக்கு.
01.04.2026 புதன் பொங்கல், திருத்தேர் வடம் பிடித்தல்.
02.04.2026 வியாழன் மலர் பல்லக்கில் திரு வீதி உலா.
03.04.2026 வெள்ளி திருத்தேர் நிலை சேர்தல்.
04.04.2026 சனி கம்பம் எடுத்தல், மஞ்சள் நீர் விழா.
05.04.2026 ஞாயிறு மறுபூஜை.
அனுதினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க, வரிசையில் நின்று அம்மனின் தரிசனம் பெற்று வருகின்றனர். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாதவர்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை தரிசிக்க குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அனைவரும் அம்மன் அருள் பெறுவோமாக.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.