பிழை இல்லா உலகம் பேரொளியாய் விளங்கும்...!
பா. பானுமதி
அறிந்து சில பிழைகள்
அறியாமல் சில பிழைகள்
தெரிந்து பல பிழைகள்
தெரியாமல் சில பிழைகள்
புரிந்து சில பிழைகள்
புரியாமல் சில பிழைகள்
தெளிந்து சில பிழைகள்
தேர்ந்து சில பிழைகள்
வலிந்து சில பிழைகள்
வளைந்து சில பிழைகள்
விரும்பி சில பிழைகள்
விரும்பாமல் சில பிழைகள்
பிழைகளுடன் மனித வாழ்வு
பின்னிப் பிணைந்து
குழைந்து நுழைந்து
பிழைகளால் இழைந்து
பிழைகளை விழைந்து
பிழைகளில் அழைத்து
பிழையாகிக் கொண்டே போகிறது
பிழைப்புக்காக பிசிராமல்
சுயநலத்தால் சுற்றி சுற்றி
மனசாட்சி என்பது மரத்துப்போனது
மனிதம் மெல்ல மெல்ல கருத்து போகிறது
பிழைகளில் பின்னிப்பிணைந்த மனிதத்தை
சிக்கலாய் சிதைந்ததை சீர்தூக்க நல் சிந்தை தேவை
கல்வி என்பது கந்தலுக்கானது; கயமைக்கு வேரானது
கடவுளே தன்னைப்போல பிறரை எண்ணும்
கருணை மழை பொழிவாய் அப்போதே
மனிதம் மண்ணில் மலரும் மகிழ்ச்சி எங்கும் பரவும்
பிழை இல்லா உலகம் பேரொளியாய் விளங்கும்...!