நிழல் தேடும் மரங்கள்

Su.tha Arivalagan
Jul 01, 2026,11:34 AM IST

- புலவர் ப.ஈஸ்வரநாதன்


நீதியைத் தேடுகிறேன்...

நிதியின் உள்ளே மறைகிறது...


சட்டம் வளைகிறது

உதிரி உதிரியாய் உடைகிறது...


ஊழல் உருவாகிறது எங்கும்

லஞ்சம் பெருகுகிறது...


குற்றம் கூடுகிறது

எப்போதும்

பதற்றம் நிலவுகிறது...


அநியாயம் அதிகமாகுது

ஆங்காங்கே

அலட்சியம் ஆரம்பமாகுது...




நித்தமும் நிம்மதி இழந்தே

மக்கள் தவிக்குது...


நியாய தேவதையோ கண்மூடி கலங்கி நிக்குது...


நியாய தராசும்

ஒரே பக்கமாய் சாயுது...


நெஞ்சத்தில்

வேதனையும்

நிழல் தேடும்

மரங்களாயின...


நீதியும் காணல

வாழ்வில்

நிலைமையும் மாறல...


பணத்தைப் பார்த்ததும்

பணிவாய்

தீர்ப்பும்

வணங்குதே...


மனதைப் பார்க்க

மனமும் சாட்சியும் தயங்குதே...


நிழல் தேடும் மரங்களாய் நித்தமும் வாழ்க்கையே...