தேர்தலில் தோற்று செத்து சாம்பலானாலும் நடக்காது... நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டம்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். தேர்தலில் தோற்று செத்து சாம்பலானாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று நாதக ஒருங்கிணப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் பயந்து, கூட்டணிக்குப் போய்விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். தேர்தலில் தோற்று செத்து சாம்பலானாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். கூட்டணியில் இணைந்து நாதக தனது தனித்துவத்தை ஒருபோது இழக்காது.
அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை, நான் ஒரு போதும் செய்யமாட்டேன். விஜய் வருகையால் எங்களுக்கு வாக்குகள் குறையும் என தவறான தகவல்களை பரப்புகிறார்கள். நான் மக்களுக்கு ஆனவன். எனது வெற்றியையும், தோல்வியையும் மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நாம் தமிழர் கட்சிக்கு கூட்டணியே தேவையில்லை.
வாக்கை பற்றி கவலைப்படுகிற ஒருவன் மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டான். ஓட்டை குறிவைத்து வேலை செய்பவன் நாட்டை பற்றி கவலைப்பட மாட்டான். சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களை பற்றி சிந்திப்பவன்; மக்களை பற்றி கவலைப்படுபவன் சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க அவனுக்கு நேரமும் இருக்காது. தேவையும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.