இனி ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

Meenakshi
Feb 19, 2026,06:02 PM IST

சென்னை:  இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என சட்டபேரவையில்  அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி  மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில் ர%.5,000 வரவு வைக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதனையடுத்து தமிழக மகளிருக்கு ஸ்டாலின் தந்த உறுதிமொழி தான் உரிமைத் தொகை. தேர்தலை காரணம் காட்டி 3 மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்க பார்க்கின்றனர். வாக்குறுதி முந்திக் கொண்டது திமுக அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு முன் பணமாக 3,000 ரூபாய், கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2000 என 5,000 ரூபாய் மகளிர் உரிமைத்திட்டன் கீழ் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.




இதற்கு பல்வேறு கட்சியினர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் பயத்தில் இரவோடு இரவாக 5,000 ரூபாயை திமுக அரசு விடுவித்துள்ளது. இதற்கு கற்பனைக் காரணங்களை வேறு திமுக அரசு கூறியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் தான் கோடை காலம் வருகிறதா என்று  இன்று நடைபெற்ற சட்டசபையில்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  கேள்வி எழுப்பி இருந்தார்.


இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகால சிறப்பு தொகை வழங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்துள்ளார்.