கைபேசி மயம்!

Su.tha Arivalagan
Jan 08, 2026,03:39 PM IST

- வே. ஜெயந்தி


இந்த உலகம் மாயமானது,

எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள்!


உள்ளங்கையில் உலகம்

அடக்கம் பெற்ற காலமிது.




ஆமாம்… கைபேசி மயம்

மறைந்ததே அன்பெனும் நேயம்.


வாட்ஸாப்பில் குறுஞ்செய்தி,

மனங்களில் மட்டும் ஏக்கம்;

சொல்ல மறந்த கதைகள்

மௌனமாகிப் போனதே.


வாழ்த்துகளும் சோகங்களும்

உணர்வல்ல… செய்திகளாயிற்றே;


கண்ணீர் கூட இப்போது

எமோஜியாக மாறிற்றே.


முகம் பார்த்து பேசும் நேரம்

திரையாக சுருங்கியது,


உள்ளம் தொட்ட உறவுகள்

அலைவரிசையில்

தொலைந்தது.


உலகம் எங்கே செல்கிறதோ?

முன்னேற்றமா தனிமையா?

மனிதம் கைபேசியை

மீண்டும் வெல்லும் நாளே விடையா?


(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)