Happy Father's Day: அப்பாவின் அன்பு !

Su.tha Arivalagan
Jun 21, 2026,04:22 PM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


சொல்லால் கூற முடியுமோ 

அப்பாவின் அன்பை அகிலமே... !!!


கண்ணுக்கு தெரியும் தெய்வம்தான்

உன்னால் மறுக்க முடியுமோ...!!!


உலகம் நீயும் காணவே 

அல்லும் பகலும் உழைத்திடுவார்...!!!


எதிர்பார்ப்பில்லா  அன்புதான் 

என்றும் நிலைத்து வாழும்தான்...!!!


உன் குரலை கேட்டாலே  

மற்றதெல்லாம் மறதிதான்...!!!


உந்தன் பசியை போக்கவே 

அப்பாவின் கைகளில் ரணங்களும் இன்பம்தான்  ...!!!




சீராட்டி வளர்க்கவே 

சிரமம் பல அடைந்திடுவார்...!!!


சிட்டாய் நீயும் வளரவே 

பட்டு மெத்தை வாங்கிடுவார்...!!!


இதமாய் நீயும் கண்ணுறங்க 

விசிறி ஆட்டி இதமான காற்றை  வரவழைத்திடுவார்...!!!


சொகுசாய் நீயும் வளர்ந்திடவே 

அவரின் கரங்களை உலகம் ஆக்கிடுவார்....!!!


உந்தன் ஒவ்வொரு  அசைவையும் 

பாராட்டி ஊக்கம்  அளித்திடுவார்..!!!


நீயும்  நன்றாய் படிக்கவே 

அதிகாலை தினமும்  எழுப்பிடுவார்.!!!


படித்து பட்டம் பெற்றாலே 

உலகை வென்ற இன்பம் அடைந்திடுவார்...!!!


சிறந்த பணியில் அமர்ந்திட்டால் 

அனைவரிடமும் சொல்லிச் சொல்லி

 மகிழ்ந்திடுவார்...!!!


திருமண விழாவை உனக்குதான் 

ஊர்மெச்ச செய்திடுவார்...!!!


வாரிசுகளை எல்லாம் வளர்த்துதான் 

அன்பு மழையை பொழிந்திடுவார்.!!!


சேவகனாக மாறித்தான் 

சேவையெல்லாம் செய்திடுவார்...!!!


இறக்கும் வரை உன் நினைவே

உதிரமாக ஓடிடுமே...!!!


எல்லா இழப்பையும் மீட்டிடுவார்

அப்பா உடன் இருந்தாலே...!!!


அப்பாவை  நீயும் இழந்தாலே 

எதுவுமில்லை உலகிலே ...!!!


அப்பாவின்  அன்பு  சிகரம்தான் 

என்றும் அணையா விளக்குதான்...!!!


அப்பாவின் அன்பு தொடரும்தான் 

சொல்லி முடிக்க முடியாதே...!!!


கண்ணுக்கு தெரியும் தெய்வம்தான் 

கண்ணென, காத்திடவேண்டும்தான்.....!!!


வெளியே கண்டிப்பு என்றாலும்

உள்ளம் என்றும் மென்மை தான்... 


அப்பாவிற்கு நிகர் உண்டோ

இவ்வுலகில் வேறு வரம் உண்டோ


தந்தையே சிறந்த வரம்

நம் பாதுகாப்புக்கரம்


அப்பாவின்  அன்பு............

உலகம் உள்ள வரை.......!!!!

சொல்லில் அடக்கமுடியுமோ....

சொல்லித் தீருமோ..வையகமே..!!


தந்தை என்பது வெறும் சொல் அல்ல வாழ்க்கையின் தாரக மந்திரமே... 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)