கவிதை வராவிட்டாலும் எழுது

Su.tha Arivalagan
Aug 16, 2026,11:17 AM IST

- எழுத்து மின்னல் பாத்திமா அப்றா


கவிதை வராவிட்டாலும் எழுது  

எழுதிட்டே இரு  

முதல் வரி கோணலாக இருக்கலாம்  

இரண்டாம் வரி உடைந்து போகலாம்  

ஆனால் பத்தாவது வரியில்  

உன் உயிர் பேச தொடங்கும்  


வார்தைகள் வர மறுத்தாலும் எழுது  

காகிதம் வெறுமையாக இருந்தாலும் எழுது  

ஏனெனில் எழுத்து என்பது பயிர்  

தினம் தினம் நீர் ஊற்றினால் மட்டுமே  

ஒரு நாள் அது கதிர் விடும்  




யாரும் படிக்காவிட்டாலும் எழுது  

யாரும் பாராட்டாவிட்டாலும் எழுது  

உன் எழுத்து உனக்காக  

உன் காயத்திற்கு மருந்தாக  

உன் கனவிற்கு சிறகாக இருக்கட்டும்  


கவிதை வராவிட்டாலும் எழுது  

எழுதிட்டே இரு  

ஒரு நாள் உன் பேனாவில் இருந்து  

காலத்தை வெல்லும் கவிதை பிறக்கும்


[16-08-2026 10:41] Arivu Alagan: 21. திருமண நாள் 

மனம் அறிந்து  

மாலை அணிந்து  

மகிழ்த்திட்ட தருணம். 

 

முகம் சிவந்து  

முறுவல் உதிர்த்து  

முத்தமிட்ட தருணம், 

 

காலம் கனிந்து  

காதல் துளிர்த்து  

கரம்பிடித்த தருணம். 

 

வறுமை கடந்து  

வாழ்க்கை மலர்ந்து  

வாழத் துணிந்த தருணம், 

 

பல்லாண்டு பயணத்தில் 

பார்வையாளராய் இல்லாமல் 

பயணித்த தருணம், 

 

வயதானாலும் வாழ்வை  

நினைவூட்டுகிற நினைவுகளுள் 

நிறைந்திட்டத் திருமண நாள்.