டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!
டெல்லி: நவராத்தியில் இருந்து தீபாவளி வரையிலான நாட்களில், டாடா நிறுவனம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்துள்ளது.
நவராத்திரிக்கும், தீபாவளிக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 1 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது டாடா நிறுவனம். பண்டிகை காலம் மற்றும் ஜிஎஸ்டி குறைப்பால் சந்தையில் டாடா நிறுவன பங்குகளும் உயர்ந்துள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 33 சதவீத வளர்ச்சியாகும்.
டாடா மோட்டர்ஸ் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 33 சதவீதம் விற்பனையுடன், புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் MD-யும், CEO-வும் ஆன சைலேஷ் சந்திரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நவராத்திரி முதல் தீபாவளி வரையான 30 நாட்களில், 1 லட்சத்திற்கும் அதிகமானவாகனங்கள் விற்பனை ஆகி இருப்பதாகவும், SUV-வில் Nexon, 38 ஆயிரம் யூனிட்கள் விற்பனையுடன் 73 சதவீதம் வளர்ச்சியும், Punch 32 ஆயிரம் யூனிட்களுடன் 29 சதவீதம் வளர்ச்சியும் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல, மின்சார வாகனங்கள் பிரிவிலும் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையுடன் 37 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.