வாழ்த்து மழையில் நனையும்‌.. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்!

Manjula Devi
May 02, 2025,05:59 PM IST

சென்னை: முதன்முறையாக சசிகுமார் மற்றும் சிம்ரன் கூட்டணியில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் வெற்றிக்கு பல்வேறு திரை பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கி உள்ளார். முதல்முறையாக ‌

சசிகுமார், மற்றும் சிம்ரன், இணைந்து நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஜெகன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.




குட் நைட், லவ்வர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மில்லியன் டாலர் ஸ்டுடியோ தயாரிப்பில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் நேற்று வெளியானது. இலங்கையில் ஏற்பட்ட வறுமையின் காரணமாக ராமேஸ்வரம் பகுதிக்கு யாருக்கும் தெரியாமல் வரும் சிம்ரன் சசிகுமார் தம்பதிகள் மீண்டும் சென்னைக்கு வருகின்றனர். சிம்ரனின் தம்பியான யோகி பாபு வீட்டில் தங்குகின்றனர்.


இதன் பிறகு இலங்கையில் வெடி விபத்து நிகழ்கிறது. இந்த விபத்திற்கு காரணம் சசிகுமார், சிம்ரன் தம்பதியர் என்று இவர்களைத் தேடி வரும் போலீசாரிடம் இவர்கள் தப்பிப்பார்களா அல்லது  சிக்குவார்களா  என்ற  அடிப்படையில் மீதிக் கதையின் நகர்வுகள்  அமைந்துள்ளது.  அதே சமயத்தில்  பசி, பட்டினி, வறுமை, காரணமாக பிழைப்பு தேடி அகதிகளாக வந்து  எப்படி சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி இருப்பதால் ரசிகர்களை இப்படம் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் சசிகுமார் சிறந்த கணவராகவும், அவருக்கே உரிய தம்பதியாக சிம்ரன் வலம் வருவது அருமை என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


மே தினமான நேற்று விடுமுறை என்பதால் இப்படம் முதல் நாளிலேயே ரூபாய் 2.5 கோடி வசூலை பெற்றுள்ளது.


இந்த நிலையில் தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திற்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், இப்படத்திற்கு திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள், தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை சில நாட்களுக்கு முன்பு படத்தைப் பார்த்தேன்.


சுற்றுலாப் பயணிகள் குடும்பம் சிரித்து அழுது மகிழ்ந்ததை, ரசித்தேன். சசிகுமார் சார், சிம்ரன் மேடம், இயக்குனர் அபிஷண், ஷான், தயாரிப்பாளர் யுவராஜ் மற்றும் மகேஷ் மற்றும் மில்லியன் டாலர் படங்களின் நிறுவனம் ஆகியவை பிளாக்பஸ்டருக்கு தகுதியானவை என பாராட்டி இருந்தார்.


அதேபோல் இன்று டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் பார்த்தேன். என் இதயம் நிறைந்து விட்டது. நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கச்சிதமாக கையாண்டுள்ள மிகவும் அழகான திரைப்படம். இதயபூர்வமான அனுபவத்தை பகிர் அளித்த படக்குழுவிற்கு எனது நன்றி என ஜி.வி பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.