இளம் படைப்பாளி!

Su.tha Arivalagan
Apr 11, 2026,04:23 PM IST

- பி.ஆர். ஹெலன்


பட்டாம்பாக்கம் பள்ளிக் குழந்தைகளின்

படைப்பாற்றல் திறனை


பட்டென மலர்களில் அமர்ந்து செல்லும்

பட்டாம் பூச்சியது மகரந்தச் சேர்க்கை போல்

 

சிறுக சிறுக எழுத்து வண்ணம் தீட்டி 

சிறுகதை எழுதும் அளவு வர்ணம் தீட்டி


சிறுசிறு புத்தகங்களாக வடிவமாக்கி - இன்று 

சிறப்பான  புத்தக வெளியீடு குழந்தைகளின் குணமதை அறிந்து


குழந்தையோடு குழந்தையாய் இணைந்து

குழந்தைகள் கூறும் காதகன், கவிதைகளை


குறித்துக் காண்பித்து ஒழுங்குபடுத்தி

சிந்தனை ஆர்வம் அதை தட்டியெழுப்பி 




படைப்பதனுக்கு பரிசு தந்து பாராட்டி

சிறந்த எழுத்தானனாய் மாணவன் வர


தூண்டுகோலானாய் ஆசிரியர் பிருந்தா -ஆம்

புதிய யோசனைகளை புத்தக வடிவமாக்கி


புகழ் என்றும் ஏணியில் ஏற்றி விட்டாய் -- இனி 

சிந்தனையில் தெளிவுடன்   சிறகடிப்பான் உயரத்தின் உச்சியில்!



(Helen . P. R, Social teacher , GHS, Melpattampakkam , Cuddalore)