வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?

Su.tha Arivalagan
Dec 28, 2025,02:10 PM IST

- த.சுகந்தி 


மயிலாடுதுறை: தமிழ்நாடு வனத்துறை நடத்தும் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பற்றிய தகவல் தெரியுமா?


ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும்  ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு வனத்துறையினர் பறவைகள் ஆர்வலர்கள்  மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 என 2 நாட்கள் நடைபெறுகின்றன .


ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த வனத்துறையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளாக பிரிக்கப்பட்டு அந்தப் பகுதிக்கு பறவை ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களை காலை 6:00 மணிக்குள் வர சொல்லி நீர் வாழ் பறவைகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கைகளை கணக்கெடுத்து e-bird என்ற app-ல் பதிவேற்றம் செய்வார்கள் .


புதியதாக வரும் தன்னார்வலர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக வனத்துறையினர் மற்றும் வழிகாட்டியினர்  செயல்படுவார்கள்.


இந்நிகழ்வில் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து, Endangered Wildlife and Environmental Trust (EWET) அமைப்பு ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டது. இந்த அமைப்பின் நிறுவனர் சதீஷ்குமார் ராஜேந்திரன் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணம், தஞ்சாவூர் ,திருச்சி பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.


எனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கலந்து கொண்டு வருகிறோம்.




இயற்கை வளங்கள் மற்றும் ஈரநில சூழல்களின் பாதுகாப்பில், இத்தகைய அறிவியல் பூர்வமான கணக்கெடுப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. வனத்துறையுடன் இணைந்து இப்பணிகளில் பங்கேற்றதற்கு பெருமை கொள்கிறோம்.


இனிவரும் காலங்களில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். பல்வேறு வகையான பறவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும். தமிழ்நாடு வனத்துறையுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் கலந்து கொண்டு பறவைகள் கணக்கெடுப்பை அறிந்து கொள்வதற்கு நாம் உதவி செய்யலாம்.


பறவைகள் கணக்கெடுப்பின் மூலம் நாம் அழிந்து வரும் பறவை இனங்களையும், குறைந்து வரும் பறவை இனங்களையும் கண்டறிந்து அவற்றை பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும்.


வலசை வரும் (வேறு இடங்களில் இருந்து வரும்)  பறவை இனங்களையும் நாம் அறிந்து கொள்ள  உதவியாக இருக்கும் .


நாம் அனைவரும் தன்னார்வலராக பணி புரிவதை  பெருமையாக கருதுவோம்.