RIP Solomon Pappaiah: என்றும் நினைவோடு!

Su.tha Arivalagan
Sep 12, 2026,11:01 AM IST
- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை 

கருப்புத் தங்கமே ...
பிரிந்தது பூத உடல் 

நிறைந்தது உன் தமிழ் ஆவி 
தமிழ் மக்களின் நீங்கா நினைவுகளோடு ...

இனி பட்டிமன்றங்கள் நடக்கும் போதெல்லாம் 
உன் சொல்லாடல் நினைவில் மணந்தே நிறைந்திருக்கும் ....



அறிவுச்சுடரே சாலமன் பாப்பையா ...
நீ மறைந்தது தமிழ் உலகிற்கு இழப்பையா ...

நகைச்சுவையும் சிந்திக்க வைக்கும் உணர்வும் 
உன் சொல்லில் கலப்பையா ...

இலக்கியத்தை எளிய பாமரனும் அறிய வைத்த அறிவைய்யா

நிறைய உழைத்து விட்டாய் என்பதால் இறை தந்த ஓய்வையா ...

நீங்கள் மறைந்தாலும் தமிழ் உள்ளங்களில் என்றும் வாழ்வீர்கள் ஐயா !

(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)