தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் வறண்ட நாட்களை அதிகம் கண்ட அனைத்துப் பகுதிகளும் இனி கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிகச் சிறந்த மழை நாட்கள் வரவிருக்கின்றன.
குறிப்பாக, வேலூர், ராணிப்பேட்டை, சென்னை (KTCC), கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு (அருகிலுள்ள பகுதி), திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் வரும் நாட்களில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், கேரளா, கர்நாடகா, நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக பலத்த மழை பொழியும் வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.