வசந்தம் வரவேற்கும் நட்பு!
Nov 23, 2026,12:45 PM IST
- கு. கவிதா
தோழமை ஒன்றிருக்க
தோல்விகள் ஓடிவிடும்.
வருந்துயர்கள் காற்றுடன் காற்றாக கலந்துவிடும்.
ஆறுதல் தரும் நெஞ்சம் அருகிருக்க,
ஆனந்தம் அனுமதி பெறாமல் அரவணைக்கும்.
உதடுகள் புன்னகைக்காவிடினும்
உள்ளம் மகிழும்.
தொலைவினில் பிரிந்திருப்பினும்
மனதினில் இணைந்திருப்போம்.
வசந்தம் வரவேற்கும் எங்கள் நட்பை.
இசையில் நயமாகும் எங்கள் தோழமை.
(கு. கவிதா, பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம்)