ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் !
- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்
ஆயூத பூஜையும் , சரஸ்வதி பூஜையும்
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையே
நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் விழா இதுவே.
தொழிலையும் உழைப்பையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கும் விழாவாகுமே.
சரஸ்வதி பூஜையும் ஆயுத பூஜையும் கொண்டாடுவோமே.
சரஸ்வதி பூஜையின் சிறப்பே
கல்வி, அறிவு என ஞானத்தின் கடவுளான சரஸ்வதி தேவியை வழிபடுதலே.
புத்தகங்கள், நோட்டுகள், பேனாக்கள் வைத்து வழிபடவேண்டுமே.
ஆயுத பூஜையின் சிறப்பு தொழிலுக்குப் பயன்படும் கருவிகள்
இயந்திரங்கள், வாகனங்கள் அலங்கரித்து வழிபடுதலே.
சரஸ்வதி பூஜை கல்விக்கும் அறிவுக்கும் சிறப்புதானே.
ஆயுத பூஜை தொழிலுக்கும் உழைப்புக்கும் சிறப்புதானே.
வீடும் ஆயுதங்களும் தூய்மை ஆயிற்று.
மாணவச்செல்வங்கள் புத்தகங்களையும் பேனாக்களையும் வழிபட வைத்தாச்சு.
வீடும் பள்ளியும் அலுவலகமும் தொழிற்சாலையும் சுத்தம் செய்தாச்சு.
சந்தனமும், குங்குமும் கலந்து பொட்டு வச்சாச்சு.
பூ அலங்காரம் சாமிக்கு செய்தாச்சு.
ஊதுவத்தி ஏற்றித்தான்
பொரி, பழங்கள், தேங்காய் இனிப்புகளை வைத்து படைத்துத்தான்
இறைவனை வணங்கியாச்சு.
பிரசாதம் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தாச்சு,
நல்ல படிப்பைக்கொடு சரஸ்வதி தாயே என கும்பிட்டாச்சு.
பொட்டு வைத்துக் கொண்ட புத்தகங்களின் அழகை பார்த்து ரசிச்சாச்சு.
பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் மதிக்க வேண்டும் என்பதை அறிந்தாச்சு.
ஆயுத பூஜை நமக்கு உணர்த்தும் முக்கியமான செய்தி இதுவாச்சு.
உழைப்பே உயர்வுக்கு வழி என நினைவூட்டுதே
எந்தத் தொழிலையும் தாழ்வாகக் கருதாமல்
எல்லாத் தொழில்களையும் மதிக்க வேண்டுமே.
ஆயுத பூஜை வெறும் வழிபாட்டு விழா மட்டுமில்லையே
உழைப்பின் மகத்துவத்தை உணர்த்துதே
தொழிலின் சிறப்பை எடுத்துக்காட்டுதே
நாம் அனைவரும் உழைப்பை மதித்து நடப்போமே
நன்றியுணர்வுடன் வாழ்வோமே
உழைப்பே உயர்வு தருமே
உழைப்பவரே உலகின் வளர்ச்சிக்குக் காரணமே
பண்பாட்டைப் பாதுகாப்போமே
நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும்
அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோமே
பண்டிகை என்பது வெறும் விழாவல்ல
நம் பாரம்பரிய சின்னமே..
உழைப்புக்கு மதிப்பளிப்போமே
பரிசுகள் வழங்கி ஊக்கமளிப்போமே
பண்பாட்டையும் பாரம்பரியத்தையும்
காத்து நிற்போமே
தலைமுறை பலகடந்தும்
கொண்டாடி மகிழ்வோமே .
ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
சகோதர சகோதரிகளே
இல்லத்தில் சிரிப்பொலியும் உள்ளத்தில் மகிழ்ச்சியும்
மலரட்டும் மணம்வீசும் மலர்கள் போல கமழட்டும்.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)