நான் தான் ஆசிரியர்!

Su.tha Arivalagan
Oct 03, 2026,04:37 PM IST

- கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன்


என் அன்பு சகோதர சகோதரிகளே.. ! அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.  வாங்க நினைவலைகள், 2 வதுபாகம் பார்ப்போம்...


I have a dream ஆமாங்க ..! எனக்கு ஒரு கனவு இருந்ததுங்க ....


எப்போன்னு கேக்குறீங்களா..! எப்படி சொல்ல from childhood .. yes childhood ...!


இப்ப எனக்கு  மதிப்புமிகு ஐயா .A.P.J. அப்துல்கலாம் ஐயாவின் வைரவரிகள் நினைவிற்கு வருதுங்க...


ஆனா ...! அப்ப எனக்கு  (childhood) இந்த வரிகள்  தெரியாது பாருங்க .. வாங்க அந்த வைரவரிகள் என்னன்னு பார்ப்போம்...




கனவு காணுங்கள்! 


கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல, உங்களைத் தூங்கவிடாமல் எது செய்கிறதோ அதுதான் கனவு." "கனவுகள் எண்ணங்களாக மாறுகின்றன, எண்ணங்கள் செயல்களாக மாறுகின்றன."


இதுதாங்க அந்த வைரவரிகள் ...


அட இது தெரியாதா எங்களுக்குன்னு நினைக்கிறீங்களா...? சரி வாங்க என் கனவு என்னனு பார்ப்போம் .


அப்போ.. நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன்


"நான் தான் ஆசிரியர் "


இது தாங்க என் கனவு. இந்த கனவை சும்மா வாயால மட்டும் சொல்லலிங்க, நடிச்சு காட்டுவேங்க. எப்படி தெரியுமாங்க. சேலையகட்டிக்கிட்டு, கொண்டைய போட்டு கிட்டு, கையில ஒரு குடை விரிச்சி தூக்கி பிடிச்சுக்கிட்டு, ஒரு ஹேன்ட்பேக் மாட்டிகிட்டு, கையில ஒரு புத்தகம் , ஒரு பேனா ஸ்டைலா பிடிச்சிகிட்டு நான்தான் டீச்சர்னு  ஒரு நட நடந்து காட்டுவேன் பாருங்க. உண்மையான டீச்சரே அசந்து போயிடுவாங்க. அப்படி நடிச்சு காட்டுவேன் பாருங்க..

இது சிறுவயது கனவுதாங்க ஆனா பெரிய மரமாக வளரும் விதைதானுங்க..


ஏன்னா இன்றைக்கு நான் ஒரு ஆசிரியர் தான் .. ஆசிரியர்னு சொல்லும் போது ரொம்ப பெருமையா இருக்கு.. எல்லா பிள்ளைகளையும் என் பிள்ளைகள் என உரிமையோட சொல்லும் பெரும் பாக்கியம். இது தொழில் அல்ல கடவுள் தந்த வரம்..




இது எளிமையாக கிடைத்திடவில்லை.. திருமணம், பிள்ளைகள் என ஆனபின்பு அவர்களை பள்ளியில் சேர்த்து விட்டு  மீண்டும்  என் கல்விப் பயணம் ஆசிரியர் பயிற்சி கல்வி D.Ted , B.A.. ,M A.., B.Ed என தொடர்ந்தது  Phd படிக்கும் கனவும் இருக்கு... எப்போது கனவு நிஜமாகும்  தெரியாது ..ஆனா கனவு நிஜமாகும் என்ற நம்பிக்கை இருக்கு ..


என் கனவு நிஜமாக என்னைப்படிக்க வைத்து உயர்த்தி அன்றும் இன்றும் என்றும் உறுதுணையாக இருந்தவர், இருப்பவர் என் கணவர் என்பதில் பெருமை கொள்கிறேன்..


சிறுவயதில் பிள்ளைகளுக்கு  நல்ல ஒழுக்கம் மற்றும்  கனவுகளை விதைப்போம்  

வளமுடன் வாழச்செய்வோம்..


நான் அன்று  கனவு ஆசிரியர் 

இன்றைய உண்மையான ஆசிரியர் 


நல்ல கனவுகள் நிஜமாகட்டும்..


நினைவலைகள் மலரும்..


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)