Yasmin Cooking Tips: பாசிப்பருப்பு + பச்சரிசி கிச்சடி செய்வது எப்படி?

Su.tha Arivalagan
Oct 20, 2026,12:16 PM IST

- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்


தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல், உப்புமா என சாப்பிட்டு  சலிப்பா இருக்குதா. அப்படின்னா உங்களுக்காக ஒரு சூப்பர் டிஷ் இதோ! பாசிப்பருப்பு, பச்சரிசி சேர்த்து எளிமையாகவும் சுவையாகவும் கிச்சடி செய்யலாம். சாப்பிட செம டேஸ்ட்டியாகவும் இருக்கும், செய்வதற்கும் ஈஸி.


காலை உணவுக்கு ருசியான உணவு - வாங்க எப்படி செய்யலாம் என பார்ப்போம்.


தேவையான பொருட்கள்


1.பச்சரிசி 

2.பாசிப்பருப்பு 

 3.வெங்காயம் 

4.தக்காளி 

5.பச்சை மிளகாய்

6.இஞ்சி 

7.பூண்டு 

8.கொத்தமல்லி 

9.புதினா

10. உப்பு

11.நெய் 

12.எண்ணெய்  

13.இலவங்கம்

14. பட்டை

16. ஏலக்காய் 

17 .தண்ணீர் 


செய்முறை 


 


கிச்சடி செய்வதற்கு அளவானது, வீட்டில் உள்ள நபர்களுக்கு ஏற்ப மாறுபடும். ஒருசிலர் கால்படி, அரைபடி, ஒருபடி  எனவும் ஒரு சிலர் 1 கப், 2 கப் எனவும்  எப்படி வேண்டுமானாலும் அரிசியை அளவு வைத்து தேவைக்கேற்ப சமைப்பர்.


எப்படி நீங்கள் அரிசியை அளந்து எடுத்து செய்தாலும்  தண்ணீர் அளவு என்பது  1 கப் அரிசிக்கு 1 1/2 கப்,  கால்படி என்றால்  1 1/2  கால் படி.  எதனால் அரிசியை அளக்கிறீர்களோ அதில் 1 1/2 அளவு தண்ணீர அளந்து போட வேண்டும் .. அப்போதுதான் கிச்சடி மட்டுமல்ல பிரியாணி, புலாவ் ஆகியவையும் கூட உதிரியாக இருக்கும்..


பாசிப்பருப்பு அளவானது அரிசி  2 கப்  என்றால் 1/2 கப் பாசிப்பருப்பு போதுமானது.


ஒரு பாத்திரத்தில் பச்சரிசியையும் பாசிப் பருப்பையும் சேர்த்து நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளவும். தாளிக்கும் வரை தண்ணீரில்  ஊறட்டும்..


அடுப்பை பற்றவைத்து  குக்கர் சூடேறியதும்  எண்ணெய் தேவையான அளவு ஊற்றி இலவங்கம், பட்டை, ஏலக்காய் போட்டு  பின்னர்  நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியபின் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.


நன்கு வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய் சேர்க்கவும். பச்சைமிளகாயை  நடுவில் கீறி சேர்க்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். நன்கு வதங்கிய பின், நீரை வடித்து விட்டு ஊறவைத்த அரிசியை  சேர்த்து ஒரு முறை கிளறி தண்ணீரை அளந்து சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து சரிபார்த்து ,கொத்தமல்லி  புதினா தேவையான அளவு சேர்த்து பின்னர் குக்கரை மூடி போட்டு மூடவும்.

 

மூன்று விசில் வந்த பின் அடுப்பை ஆஃப் செய்யவும். 5 நிமிடம் அப்படியே வைக்கவும். பிரஷர் இறங்கிய பின்  மூடியை திறந்து  விருப்பப்பட்டால்  2 டீஸ்பூன்  நெய்சேர்க்கவும்.


இப்போது கமகம என மணம் வீசும்  சுவையான கிச்சடி தயார்..

 

கிச்சடிக்கு புதினா சட்னி சேர்த்து சாப்பிட்டால்  சுவையோ சுவை..அருமையாக இருக்கும்..


சூடாக பறிமாறவும் பாராட்டுக்களைப்பெற்று மகிழவும். இனிமையான காலை .... சுவையான உணவுடன் தொடங்கட்டும்.. புத்துணர்ச்சி மலரட்டும்!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)