Cute story: தோழி!

Su.tha Arivalagan
Oct 12, 2026,01:00 PM IST

- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்


ஏதோ சிந்தனையில் மூழ்கி இருந்தாள்  வானவி.. அப்போது அலைபேசி அழைப்பு ஒலித்தது. எடுத்து பேசினாள். மறுபுறம் வானவியின் தோழி மதுமிதா. இருவரும் நெருங்கிய தோழிகள். எந்தளவு என்றால் வாடி போடி என பேசும் அளவிற்கு.


என்னடி போன் கூட எடுக்காம என்ன செய்துகிட்டு இருக்க என்றாள் மதுமிதா.. சும்மா உன்னப் பத்தி பழைய நினைவலைகள் தான் .. அப்படி என்ன என்ன பத்தி சிந்தனை  உனக்கு ..


அதுவா நாம காலேஜ்ல படிக்கிறப்ப Good morning  dear friends அப்படினு உன் கம்பீர குரல்ல சொன்னியே. அப்பதான் நான் உன்னை முதல்ல பார்த்தேன். யார்ரா இவ அப்படினு. அதைத்தான் நினைச்சேன். நீயே கால் பண்ணிட்ட என்றாள் வானவி.


எத்தனை வருடமானாலும் நீ என்ன கிண்டல் பண்றத விடமாட்ட இல்ல என்றாள் மதுமிதா.. எப்படி மறக்க முடியும். எனக்கு தெரியாத சென்னையில நான் தைரியமாக படிக்க எனக்குத் துணையாக இருந்தவளாச்சே  நீ. எனக்கும் சேர்த்து மதிய உணவு கொண்டு வருவாயே மறக்க முடியுமா. 




சரி ..சரி .. எத்தனை  வருடமானாலும் இதையேதான் நீ  சொல்லிட்டு இருப்ப என்றாள் மதுமிதா. நீ எனக்கு கிடைச்ச உண்மையான  தோழிடி ..காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப்பெரிது.. சரி என்ன கால் பண்ண விஷயத்த சொல்லு என்றாள் வானவி.. 


என் மகன் 12ஆம் வகுப்பு பாஸ் பண்ணிட்டான். நீ  கூட நல்லதே நடக்கும்னு சொன்ன.. அதுமாதிரியே காலேஜ்ல சீட் கிடைச்சிடுச்சி என்றாள் மதுமிதா  ... வாழ்த்துக்கள் சொல்லு தம்பிக்கு. காலேஜ்ல சேர்த்து நல்லா படிக்கவை. அவன் எதிர்காலத்துல நல்லா வருவான். உனக்கு தேவையான பொருளாதாரத்தை கடவுள் கண்டிப்பா தருவார்.உனக்கு வரும் சோதனைகளை நினைத்து  பயப்படாதே. கடவுள் கூட இருப்பார் கைவிட மாட்டார்  என்றாள் வானவி..


சரிடி. இப்ப உன்கிட்ட பேசினதால   என்னோடமனசு  சந்தோஷமா இருக்கு, தன்னம்பிக்கையா  இருக்கு  .. சரி நான் ஃபிரியா இருக்கும்போது கால் பண்றேன். இப்ப காலேஜ்ல அட்மிஷனுக்கு போகிறேன் நேரமாச்சு ... உன்கிட்ட பேசினா கவலை மறந்து மகிழ்ச்சி அதிகமாகுதுடி என்று கூறி போஃனை வைத்தாள் மதுமிதா.


வானவியும்  ஆபிஸுக்கு கிளம்பிவிட்டாள்.. நண்பர்களுடன் பேசும்போது  ஏதோ சந்தோசம் நம்மை தழுவிக்கொள்கிறது, கவலைகள் விலகிச்செல்கிறது  என இருவரும் மனதிற்குள் மகிழ்ந்தபடி வேலைகளைத் தொடங்கினர். 


இரு தோழியரும் எந்த விஷயமானாலும் மனம்விட்டு பேசி மன இறுக்கம் அகற்றி மகிழ்வாக நட்பு பாராட்டுகின்றனர்.. இவர்களின் நட்பு தொடர்கிறது... 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)