புயல்

Su.tha Arivalagan
Nov 03, 2026,04:43 PM IST

- கவிஞர் கா. யாஸ்மின் சிராஜுதீன்


உயர்ந்த தாழ்ந்த காற்றழுத்தம் 

கூட்டணி போடுது!


தென்றல்  பொங்கியெழுந்து 

புயலாய் மாறுது!


உலகநாடுகள் சேர்ந்தே 

பெயரை வைக்குது!


யார் மீது கோபம்  கொண்டு 

கடலிலாடுது!




திரள், கார்முகில் என தலையை 

விரிக்குது!                         


உலகையெல்லாம் மிரள  வைக்குது!

இடி, மின்னலாய் சண்டை போடுது


கண்ணீரெல்லாம்

பெருமழையா  கொட்டுது!


பலத்த  வேகத்துடன்  கரையை கடக்குது!

சேதம் எல்லாம்  கணக்கு பார்க்குது!


கோபம்  கொண்டு எழுந்த  புயலும் 

வெறுங்கையோடு அமருது!


வாழ்க்கை  தத்துவம் நமக்கு சொல்லுது!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கரடிக்குப்பம், மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிதை (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சிந்தனை துளிகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சிறுகதை, கட்டுரை , வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்.