அறிவு என்னும் ஒளியை ஏற்றுமே.. அன்பை தீப ஒளியாய் பரப்புமே!
- கவிஞர் க .யாஸ்மின் சிராஜீதீன்
கார்த்திகை தீபம் ஒளிவீசும் காலம்
கோடிக்கண்கள் காணும்
அலங்காரத் திருநாள்
வெறும் விளக்கேற்றும் விழா மட்டுமில்லையே
நம் வாழ்வில் நல்ல எண்ணங்களை விதைக்குமே
அறிவு என்னும் ஒளியை ஏற்றுமே
அன்பைதீப ஒளியாய் பரப்புமே
ஒற்றுமையை ஆலம்விழுதாய் படரவைக்குமே
இருளை ஒளி வெல்லுமே
தீய எண்ணங்களை நல்ல எண்ணங்கள் வெல்லுமே
இதுவே இத்திருவிழாவின் ரகசியமாகுமே
தமிழர்களின் பாரம்பரியவிழாவே
ஆன்மிகப் பெருமையும் நிறைந்த பெருவிழாவே
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனிச்சிறப்பே
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வருமே
அந்நன்நாளில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுமே
வீடுகளை அகல் விளக்கு அலங்கரிக்குமே
கோவில்களில் அகல் விளக்குகளை ஏற்றி
மக்கள் இத்திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனரே
வானில் காணப்படும் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பு அறுமீன் ஆகுமே
கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என அழைக்கப்படுமே
ஆறு நட்சத்திரங்களும் கார்த்திகைப் பெண்களைக் குறிக்கின்றனவே
இது புராண நம்பிக்கையே.
முருகப்பெருமான் ஆறு குழந்தைகளாகத் தோன்றினரே
பார்வதி தேவியால் ஒன்றிணைக்கப்பட்டு ஆறுமுகனாக ஆனாரே
இந்த கதை கார்த்திகைத் திருநாளுடன் தொடர்புடையதே
கார்த்திகை பெண்கள் முருகப்பெருமானை வளர்த்ததால் அவர்கள் சிறப்பிக்கப்படுகின்றனரே
கார்த்திகை தீபத்தன்று மாலை நேரத்தில் வீடுகள் முழுவதும் அகல் விளக்குகள் ஒளிவீசுமே
மக்கள் இறைவனை வழிபட்டு குடும்ப நலன், அமைதி, மகிழ்ச்சி யை அள்ளித்தா என வேண்டுவரே
விளக்கின் ஒளி அறியாமை என்னும் இருளை நீக்கி அறிவு என்னும் ஒளியைப் பரப்புவதாகக் கருதப்படுகிறதே
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதே
அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுமே
மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுமே
ஆயிரக்கணக்கான பக்தர்களின் மனதில் பக்தியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்துமே
தீபக்காட்சி சிவபெருமானின் ஜோதி வடிவத்தை நினைவூட்டுமே
கார்த்திகை தீபம் குடும்ப ஒற்றுமை, பக்தி, இயற்கையை மதித்தல், பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்கிறதே
குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றிணைந்து விளக்கேற்றுவரே
மகிழ்ச்சியுடன் இத்திருநாளைக் கொண்டாடுவரே
அறு மீன் சேரும்
அகல் இருள் நடுநாள்
கார்த்திகைத் திருநாள் விளக்குகளையும்,
வானில் தோன்றும் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தையும் சுட்டுமே
வீட்டில் ஏற்றும் தீபம் ஒளி தருமே
உள்ளத்தில் ஏற்றும் நற்பண்புகள் வாழ்வை ஒளிரச் செய்யுமே
கார்த்திகை தீபத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோமே
தீப ஒளி ஏற்றுவோமே உள்ளத்தில் நற்சிந்தனைகளை விதைப்போமே
தமிழர் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் போற்றிப் பாதுகாப்போமே
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன், இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்குப் பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாகக் கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்.)