Yasmin Poem: சிரித்து வாழுங்கள்
- க.யாஸ்மின் சிராஜூதீன்
சிரிப்பு மனிதனின்
தனிச் சிறப்பு
ஆறறிவின் இன்ப
உணர்வின் வெளிப்பாடு
சிரிப்பு நோயை விரட்டும்
துடுப்பு..
மழலைகளின் சிரிப்பு கவலைகளை களையும்...
ஏளனச்சிரிப்பு பிறர்
மனங்களை
காயமாக்கும்...
புன்சிரிப்பு பிறர் மனங்களை கவரும்
விரக்தி சிரிப்பு
விதியை பொறுத்தது...
கலகல சிரிப்பு
கவலை அற்றது ...
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்..
சிரிப்பே நோய்களை விரட்டும் அருமருந்து..
சிரித்துவாழ்ந்திடு
பிறரை சிரிக்கவைத்து மகிழ்ந்திடு..
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)