May Day: தொழிலாளர் தினம்.. உழைப்பில்லாமல் கிடைப்பது நிலைத்திருப்பது இல்லை!

Su.tha Arivalagan
May 01, 2026,11:12 AM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


உழைப்பிற்கு ஈடுஇணை இல்லை... 


உழைப்பில்லாமல்

கிடைப்பது நிலைத்திருப்பதும்  இல்லை... 


உழைப்பாளர்களின் வியர்வைத்துளிகள்

நம் நாட்டின் ஏணிப்படிகள்.... 


வியர்வை துளியில் மலரும் நம் தேசம்... 


வியர்வை துளிகள். 

வெறும் நீரன்று... 


உலக உயிர்களை 

காக்கும் அமிர்தம்... 




தந்தையின் வியர்வையே

பிள்ளைகளின் வளர்ச்சி... 


தாயின் வியர்வையே

குடும்பத்தின்  மகிழ்ச்சி... 


விவசாயிகள் வியர்வையே

முத்தான நெல்மணிகள்.. 


ஆசிரியர்களின் வியர்வையே

சமுதாயத்

தூண்களின் வெற்றி... 


ஒவ்வொரு துறையிலும் 

தொழிலாளர்கள்

சிந்தும் வியர்வையே.. 


நாட்டின் வளர்ச்சிக்கான

சிறந்த படிக்கட்டுகள்.... 


வியர்வைத்துளியின் வாசம்

நமக்கு சுவாசம்


வியர்வை துளியிலே

 மலரும்  சிறப்பான தேசம்... 


உழைப்போம் உயர்வோம்... 


தொழிலாளர்களின் உரிமைகளைக் காப்போம்... 

கடமைகளைப்

போற்றுவோம்... 


அனைவரையும்

மதிப்போம்

நட்புடன் பழகுவோம்.. 


உழைக்க தயங்காதே 

உயர்வு கிடைக்கும் மறவாதே... 


அனைவருக்கும் இனிய தொழிலாளர் தினம் நல்வாழ்த்துக்கள்.. !


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)