நிலவு நண்பன்!

Su.tha Arivalagan
Nov 09, 2026,04:22 PM IST

- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்


மழலைப் பருவத்தில் தாயின் அன்பில் ..


உந்தன் ஒளியில் உன்னில் ஒரு

பாட்டி வடை சுட்ட கதை கேட்டு 

உணவு உண்டோம்.....  


பிள்ளைப் பருவத்தில் 

உன்னுடன் பேசினோம் .... 


காணவில்லை எனில் தேடினோம்.... 


பயணத்திலும் கூடவே வருகிறாயே ... 


நீயே உற்றத்தோழன் என 

ரசித்தோம்..... 


நீர் நிலைகளில் நீ முகம் பார்க்க 

உன்னை கையிலே பிடிக்க

என்ன ஒரு மகிழ்ச்சி.... 


எப்படி எல்லாம் உன்னை

கவிஞர்கள் வர்ணிக்க 

கவிகள் பல புனைய.... 


நீல் ஆம்ஸ்ட்ராங்கோ புவியில் இருந்து

ரசித்தது போதாதென ...


உன்னைப் பிடிக்க விண்வெளிக்கே வந்து 

உன்னில் முதலடி வைத்து கொடி நாட்டினார்

வெற்றிகண்டார் ...




உன்னைக் காண உன்னில் இறங்கிய

முதல் நண்பர் இவரே... 


இன்னும் பலர் வருவர்

ஓடத்தில் ஏறியே உன்னைக் காணவே...


உன் வளர்பிறையும்

தேய்பிறையும் அதிசயமே...


இன்றும் உன்னழகை

வாளியில் பிடிக்க முயல்கிறோம்... 


நீயோ கடலைக் காண செல்கிறாய்...


நீர்நிலைகள்தான்

உனக்குக் கண்ணாடி...


நீயே எங்களுக்கு முன்னாடி

வெண்மதியாய் வலம் வருகிறாய் 

உறவாடி..


உனைக்காண மாலை நேரம்

வரவேண்டும் ...


உன்னை ரசிக்க இருளும்

புடைசூழ வேண்டும்

இப்பூவுலகை...


இரவு வானில் உன் 

அரசாட்சியே...

நட்சத்திர மண்டலங்கள்

உன்  படைவீரர்களே...


காண கண்கோடி வேண்டும்

உன் கண்கவர் 

வானமாளிகையை...

 

மனதிற்கினிய தென்றலும்...

குளிர்ச்சியான உன் ஒளியும்...


கவிஞனையும் மயக்குதே

கவிதை பல புனையப்பட வைக்குதே...


அறிவியல் வளர்ந்தாலும் 

கண்டுபிடிப்புகள் பல 

உண்மை கூறினாலும்...


உன்னை ரசிப்பதும் 

பாட்டி வடை சுடும் காட்சியும் 

இன்னும் மாறவில்லையே...


நீ குழந்தைகளின்

நண்பனாகிறாய்...


குழந்தைகளின் மனதை மட்டுமா

அள்ளிக்கொள்கிறாய்?! 

முதியவரின் மனதையும்

சாந்தமாக்குகிறாய்...


உன்னை ரசித்து வளர்ந்த

பிள்ளைகள் தான் நாங்கள்...


ரசித்த, ரசிக்கும், ரசிக்க இருக்கும்

பல தலைமுறைகளுக்கும்

நீயே நண்பன்...


உன் குன்றாத  இதமான ஒளி போல

உன் நட்பும் ஒளிவீசட்டும்...


 மழலை முதல் முதுமை வரை... 


ரசிப்பது முதல் ஆராய்ச்சி வரை...


நட்புக்கு எல்லை இல்லை

என்பதே உண்மையே...


 விண்வெளியை தாண்டிய நட்பு 

சிறுவயது நட்பு தொடரட்டும்...

 வான எல்லைகளைத்

தாண்டியும் மலரட்டும்.... 


நிலவு நண்பன் 

குழந்தைகளுக்கு மிகவும்

பிடித்த நண்பன்...


ரசித்து மகிழ்வோம் 

இயற்கையைப் பாதுகாப்போம்!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன், இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்குப் பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாகக்  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்.)