பணிநிறைவு பாராட்டு விழா!
- க. யாஸ்மின் சிராஜூதீன்
பணிநிறைவு பாராட்டு விழா என்பது
உண்மையில் பிறந்தநாள் விழா தான்
அரசு நிர்ணயித்த பணியின் இலக்குதான்.......
இளைய தலைமுறைக்கு வழிகொடுக்கும் உயரிய வழிவகைதான்.....
ஒவ்வொரு தொடக்கத்திற்கும் முடிவு என்று ஒன்று உண்டு என்பதை நாம் அறிவோம்.....
வயது தடையில்லை பணிசெய்ய
மனமெனும் பரப்பில் விளையும் ஊக்கம்
நம்மை வீர நடை போட வைக்கும் தளர்பருவத்திலும்....
ஆயிரம் கனவுகளைச் சுமந்து பணியில் அமரும் நாம் ...
ஆயிரம் நினைவுகளைச் சுமந்து பணியிலிருந்து பணி நிறைவு பெறுகிறோம்....
ஆசிரியர் பணி என்பது அறப்பணி அதற்கே தன்னை அற்பணித்து என்றும் மாணவனாய் வாழும் உயர்பாக்கியம் பெற்ற ஒப்பற்ற பணி......
பரபரப்பான காலைப் பொழுதுகள்
நிற்காமல் இயங்கும் கடிகாரங்கள்
பள்ளியின் வாயிற் கதவுகள்
வகுப்பறையின் ஒவ்வொரு கற்றல்கற்பித்தல் பொருட்கள்...
நம் மாணவக் கண்மணிகள் .....
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ....
சொல்லில் சொல்லி முடிக்க முடியுமோ .....!!!
மழைமுகம் காணாப் பயிர் போல ஆசிரியரின் வரவுக்காக காத்திருக்குமே !!! என்ன பதில் சொல்ல ....
பணிநிறைவு பெற்றோம் என்பதை மறந்து வழக்கம் போல பள்ளி செல்ல
ஆயத்தமாகும் ஆசிரியரின் கண்கள் குளமாகுமே....தன்னிலை அறிந்த பின்..... எப்படி ஆறுதல் சொல்ல ....
மாணவனாய் பள்ளியில் காலடி வைத்து.....
ஆசிரியராய் பள்ளியில் பணியாற்றி
மாணவர்களுடன் மாணவனாய் மாறி.....
அவர்களின் மன நிலைக்கு ஏற்ப கல்வி போதித்து அன்பும் அரவணைப்பும் அளித்து ......
இரண்டாம் பெற்றோர் என அழைக்கப்பட்டாலும்
என் பிள்ளைகள் என உரிமையுடன்
அவனை உலகறியச் செய்ய போராடும் நாம் என்றும் சிகரங்களே...
நம் பணியின் பின்னால் ஆயிரம் ஆயிரம் மாணவச் செல்வங்களின் அணிவகுப்பும் ,கல்வியில் மேன்மையும் நம் பணியினை பறைசாற்றும்.......
எதிர்காலச் சமுதாயத்தூண்களை உருவாக்கிய, உருவாக்கிக்கொண்டிருக்கும், உருவாக்கும் பணி நம் ஆசிரியப் பணி என்பதிலே பெருமை கொள்வோம்.....
பெருமதிப்பிற்குரிய ஆசான்களே
உம் புகழ் பரவட்டும் வையகமெங்கும்
உம் பணி தொடரட்டும் பணி நிறைவிலும் மனம் நிறையும் வரை எவ்வகையிலும்.....
கல்விப் பணியில் மனம் கல்வியை கொடுக்கத்தான் ஏங்கும்....... அறிவுச்சுடரால் எண்ணற்ற அறிவு விளக்குகளை ஏற்றிக்கொண்டே இருங்கள்.....
எம் ஆசிரியப் பெருந்தகைகளே ...!!!!!
மாற்றம் ஒன்றே மாறாதது...வாழ்கையின் ஒவ்வொரு கட்டமும் நாம் ரசித்து வாழவேண்டியவையே....
அதற்கான பாக்கியம் நமக்கு அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்
இறைவணக்கத்திலே .....
வாழ்க பல்லாண்டு...!!!!
வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் மகிழ்வுடன்....!!!!!
என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....!!!
நிஜங்கள் நிலைப்பதில்லை கால ஓட்டத்திலே.....
நினைவுகள் அழிவதில்லை நம் மன ஓட்டத்திலே......
இனிய நினைவுகளைச்சுமந்து பணி நிறைவு எனும் அகவையை அடைந்த அனைத்து ஆசான்களுக்கும் என் வீர வணக்கங்கள்....
இறைவன் அருள் புரிவான் தங்கள்
இனிய வாழ்வுக்கு....!!!
எல்லாப்புகழும் இறைவனுக்கே...!!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)