வசந்த காலமாய் புன்னகை பூத்துக் குலுங்கவே.. சித்திரை மகளே வருக!
Apr 14, 2026,03:24 PM IST
- க. யாஸ்மின் சிராஜூதீன்
சித்திரை மகளே வருக
வருகவே...
சிரித்த முகத்துடன்
காட்சி தருகவே...
இன்ப வெள்ளத்தை
அள்ளி பருகவே....
குடும்பங்கள் மகிழ்ந்து
துன்பங்கள் களையவே....
வசந்த காலமாய்
புன்னகை பூத்துக்குலுங்கவே...
வருடம் முழுவதும்
மேன்மை காணவே...
வீட்டில் சிரிப்பலை
அலைஅலையாய் பொங்கவே...
செல்வம் செழித்து
செருக்கு நீங்கவே....
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழவே...
இல்லமும் உள்ளமும் ஒளிவீசவே சித்திரை மகளே வருக வருகவே...
பராபவ ஆண்டு
அன்பு பாசம் நேசம் நிறைந்து , உடல் ஆரோக்கியம் அளித்து
நம்மை காக்கவே வருக வருகவே..
அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)