வார்த்தைகள்.. எழுத்துகளின் கோர்வையால் உருவம் பெற்றாயே!

Su.tha Arivalagan
Mar 18, 2026,03:47 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


எழுத்துகளின் கோர்வையால்

உருவம் பெற்றாயே  .... 


நாவின் சுழற்சியால் 

உள்ளுறுப்புகளின் உதவியால்

பிறந்தாயே...... 


ஒலியாய் வெளிப்பட்டு 

செய்தியாய்  செவிகளை அடைகின்றாயே ...


இதமான வார்த்தையாய் இதயத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாயே.... 


கடினமான வார்த்தையாய் 

இதயத்தை கனக்கச் செய்கிறாயே.... 




சிந்திய திரவம் போல நீயும் 

கடின வார்த்தையாய் சிந்தி விட்டால் அள்ள முடியாதே.... 


சிந்திய வடு போல  மனதில் ஆறாத வடுவாய் 

நிலைபெற்று விடுவாயே.... 


இன்பம் தரும் வார்த்தையாய் பிறந்திடுவாயே.....


பிறர் மனக்குறையை நீக்கும் மருந்தாய் இருந்திடுவாயே... 


உந்தன் ஆட்சி மனிதன் வாழ்விலே..... 


அதற்கு சாட்சி வரலாற்று ஏட்டிலே.... 


 உன்னால் மனிதன் 

பேச்சில் மிளிர்கிறான்.. 


வாழ்வில் உயர்வு பெற்று சிறப்பு பெற்று வாழ்கிறான்


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)