யுத்தங்கள் தீர்வல்ல!

Su.tha Arivalagan
Nov 19, 2026,11:37 AM IST

- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்


யுத்தங்கள் தீர்வல்ல

சிறந்த உத்திகள் தீர்வுகாணும்


எதைக் கொண்டுவந்தோம்

கொண்டு செல்ல


வளமான பூமிக்கு

வலிமையானது ஒற்றுமையே


யுத்தங்கள் மண்ணில்  விதைப்பது வெறுப்பும்

அழிவும் ஒற்றுமையின் மையும் தானே


ஒரு துளி கண்ணீருக்குப் பின்னால்

ஆயிரம் வலிகள் இருக்குமே


ஒரு யுத்தத்தின் பின்னால்

பல லட்சம் உயிர்களின்  இழப்பு இருக்குமே




வெடிக்கும் குண்டுகளின் சத்தம் அச்சம் தருமே


மனிதனின்  இதயத்தையும்

வாழ வேண்டும் என்ற உணர்வையும் 

மெல்ல அழித்துவிடுமே


அன்பு பேசும் இடத்தில்

ஆயுதம் தேவையில்லை


புரிதல் இருக்கும் மனதில்

பகைமை என்றுமில்லை


சமாதானம் தான்

உலகின் உண்மையான வெற்றி


இல்லையெனில்

யுத்தம் வென்றாலும்

மனிதம் தோற்றுவிடும்


என்ன நடந்தது என பார்க்கையில்

விலைமதிப்பற்ற

உயிர்கள் கலந்திருக்கும் காற்றினிலே


சின்னஞ்சிறிய  மழலைகள்

குண்டு போட வேண்டாமே


உண்ண உணவு கொடுங்கள் என கேட்கும் காட்சிகள்


மனதை நொறுக்கும்

உண்மைகள்


அடிப்படை தேவைகள் 

எட்டா உயரமாக


உயிரினை காக்க

எங்கே போய் மறைவது


பாதாள அறைகள்

காக்கும் அரண்களாக

மாற


மனிதனுக்கு மனிதனே

அழிக்கும் ஆயுதமானானே

என்னவென்றுசொல்ல


ஆரோக்கியமான உடலும்

மகிழ்வான மனமுமே

மிகப்பெரிய சொத்து


நாட்டின் எல்லைகள்

பொன் பொருள் ஏனைய செல்வங்கள் நிலைத்திருக்க 


யுத்தங்களால் காணாமல் போவது உன்னதமான உயிர்களன்றோ


யுத்தத்தின் பின் வரும் வாழ்க்கை நம்மை மகிழ்வாக்குமா


பல உயிர்கள் மடிந்து கிடைக்கும் வெற்றி 

யுத்தத்தின் தீர்வாகுமா


இனம் மொழி மதம் தேசம் கடந்து மனிதநேயம் மனதில் ஏந்துவோம்


கைகளில் ஏந்த வேண்டியது ஆயுதம் அல்ல,

இதயத்தில் கருணையை


வார்த்தைகளில் கனிவை 

நாடுகளுக்கிடையே 

ஒற்றுமையை


அப்போதுதான் இந்த உலகம்

அமைதியின் தோட்டமாகும்.


எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்... 


இளைய தலைமுறைக்கு நல்ல குணங்களை புகட்டுவோம்


யுத்தம் என்ற சத்தமில்லாமல்

ஒற்றுமை என்னும் உயர்பண்பை ஊட்டுவோம் 


வருங்காலமும் இளைய சமூகமும் சுகமாய்வாழ வழி காட்டுவோம்


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன், இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்குப் பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாகக்  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்.)