யாருக்கு எதுவென்று யார் அறிவாரோ !
- க.யாஸ்மின்சீராஜுதீன்
யாருக்கு எதுவென்று யார் அறிவாரோ ...!
என் பிரபஞ்சமே கவனத்தில் கொள்வாயோ...!
இது எனக்குத்தான் என நினைப்பது நிஜமாகுமோ....!
இறைநம்பிக்கை நம்மை வழிநடத்துமே...!
தன்னம்பிக்கை பலம் கூட்டுமே யார் மறுப்பரோ...!
தட்டில் இட்ட அன்னமும் நமதில்லை என்றால் நமக்கு கிடைக்குமோ.. !
நூலிழையில் உயிர் பிழைப்பது இன்னும் வாழ்க்கை உள்ளது என அறிவிக்கிறதோ ..!
திட்டங்கள் பல தீட்டினாலும் உழைப்பும் சேர்ந்தால்தான் சாதனையாகும் என உரைக்கிறதோ...!
காலங்கள் கடந்தாலும் உனக்கானது உன்னை வந்தடையும் என்பது நம்பிக்கையோ ..!
பலவேடங்கள் பலர் அணிவர் முழுதாய் நம்பிடாதே இது பாதுகாப்போ...!
உன் கவனத்தில் பகுத்தறிவில் முடிவெடுப்பது நம் நலன் கருதிதானோ ..!
எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம் மறுக்கமுடியுமோ.. !
செய்யும் முன்னே சிந்தி நல்லது கெட்டது எதுவென ஆராய்ந்திடு இதுவே பகுத்தறிவோ ..!
பணம் பல கைமாறும் ,குணம் உன்னை உயர்த்தும் ..!
நிலையில்லாத வாழ்க்கையில் நிலைத்திருப்பது செயல்கள் மட்டும்தானோ.. !
வீணாண விவாதங்கள் மனஸ்தாபங்கள் கலைந்திடுவோம்.!
முடியும்வரை உதவிகள் செய்திடுவோம் ..!
எல்லோரும் எல்லாம் பெற்றிடவே இறைவனை வேண்டிடுவோம்.
இதுதான் உயர் பண்போ...!
வேண்டுபவர்க்கு இயன்றதை செய்வோம் இதுதான் மனிதாபிமானமோ.. !
விருந்தினரை உபசரித்திடுவோம் விருந்தோம்பல் நம் பண்பாடு
இதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திடுவோம் ..!
யாருக்கு எதுவென்று காலம் பதில் சொல்லும் காத்திருப்போம் ...!
உழைப்பே நம் மூலதனம்.. தன்னம்பிக்கையே நம் பலம்தானோ..!
நமக்கானது நம்மை நாடி வரும் அதன் விலை உன் உழைப்புதானோ..!
முயற்சி திருவினையாக்கும். பயிற்சி பலமாக்கும்...!
யாருக்கு எதுவென்று யார் அறிவாரோ..!!!
நாம்தான் முயற்சிக்க வேண்டும் கருத்தில்கொள்வாயோ ...!
யாருக்கு எதுவென்று யார் அறிவாரோ...!
(G.Yasmin Sirajudheen, Secondary grade teacher, Melmalayanur block, Villupuram dt)