திருப்பூரில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்!

Meenakshi
Jul 09, 2025,05:29 PM IST

திருப்பூர்: திருப்பூரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 42 வீடுகள் எரிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. 

திருப்பூர், எம்ஜிஆர் நகரில், சாயா தேவி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் சாயா தேவி 42 தகர கொட்டகைகளை அமைத்து வாடகைக்கு வீட்டுள்ளார். இங்கு தமிழ்நாடு மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அனைவரும் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் ஒவ்வொரு சிலிண்டராக வெடித்துள்ளது.




சுமார் 4 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 தகர கொட்டகைகளும் எரிந்து சம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர், தீயனைப்பு துறையினரும் விரைந்து வந்து மீட்டு பணிகளை செய்து வருகின்றனர். இந்த வீடுகளில் தங்கியிருந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடைமைகளை தேடி வருகின்றனர்.


இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரைக்கு வீட்டில் யாரும் இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது. மேலும் சில சிலிண்டர்கள் அங்கு இருப்பதாகவும், அந்த சிலிண்டர்களும் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதால் மீட்பு குழுவினர் மீட்புபணிகளில் ஈடுபடாமல் உள்ளனர். தற்பொழுது தீயை அனைக்கும் பணி தான் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் யார் யார் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து பின்னர் தான் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.