விரல்களும், ------- மும்!

Su.tha Arivalagan
Oct 06, 2026,01:18 PM IST

- கா. காயத்ரி தேவி


விரல்களும், ------- மும்!


(------): துணிகளை அலசும் போது வாளியில் நீர் குறைவது தானே இயற்கை இங்கே என்ன அதிகமாகின்றது?


விரல்கள்: ம்... மண்ணாங்கட்டி என்று சிரித்தது.


(------): யார் அது சிரித்தது ஓ விரல்களா! ஏன் சிரிக்கின்றாய்?


விரல்கள்: வாளிக்கு உயிர் இல்லை எப்படியம்மா பேசும்.


(-----): ஓ!சரி நீயே சொல்லு,எப்படி வாளியில் நீர் அதிகமானது?


விரல்கள்: அது என் கண்ணீரம்மா...!




(-----): என்ன கண்ணீரா ஏன் அழுகின்றாய்?


விரல்கள்: இவள் துணிகளை துவைத்து துவைத்து கைகள் எல்லாம் கடுக்கின்றது அதனால் தான் அழுகின்றேன்.


(----): நீ அழுகின்றாய் என்றால் விழிகள் என்ன செய்கின்றது?


விரல்கள்: அது இரண்டு வேலையா அலைந்துகொண்டு இருக்கின்றது.


(----):  இரு வேலையா? என்ன அது?


விரல்கள்: துணிகளில் கறையைத் தேடித் தேடி துவைக்கின்றது.மற்றொன்று கறை நல்லதுன்னு சொன்ன வாயைத் தேடி அலைகின்றது.


(----): கிடைத்தால்... என்ன செய்வாய்?


விரல்கள்: கறையையே இந்த போடு போடுறா. அது நல்லதுனு சொன்ன வாய் கிடைச்சா அவ்வளவுதான் வெளுத்து வாங்கிடுவா ஹா ஹா...ஹா... ஹா...


(----): ஏதேது இந்த ரணகளத்திலும் உனக்கு நைய்யாண்டிக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.


விரல்கள்: நான் இருக்கும் இடம் அப்படி,பிறவி குணம் மாற்ற முடியாது.


(----): சரிதான் 


விரல்கள்: ஆமாம் இவ்வளவு கேட்கிறாயே நீ யாரு?


(-----): நான்தான் இவள் மனம்.


விரல்கள்: அப்போ இவ்வளவு நேரம் நாம் நமக்குள்ள தான் பேசிட்டு இருக்கோமா...!


மனம்: பிறகு வக்கீலா வந்து வாதிடுவார். பாவம் இவளோ இடைநிலை ஆசிரியர் வக்கீலுக்கு காசு கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லையாம்.


விரல்கள்: மறக்காம அந்த வாய இவள் கண்ணில் காட்டிடாதே மா.


மனம்: அப்படியே ஆகட்டும்.


ஹா...ஹா...ஹா...


(கரூர் மாவட்டம், வெள்ளையம்பட்டி கா.காயத்ரி தேவி (காயுகேசவ்), இடைநிலை ஆசிரியர். ஊ.ஒ.தொ.பள்ளி சோழதாசன்பட்டி, அரவக்குறிச்சி ஒன்றியம், கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். 14 வருடம்  ஆசிரியர் பணி அனுபவம். கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதில் ஆர்வலர். தமிழ்த்தடாகம் இலக்கியக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட கவிதை தொகுப்புப் புத்தகங்களில் கவிதைகளை எழுதியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் வானொலிப் புரவலராகவும், கவிதைகளைத் தொடர்ந்து எழுதியும் வருகிறார். தனது பள்ளி பணி அனுபவத்தில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளார்)