GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!

Su.tha Arivalagan
Apr 25, 2026,04:53 PM IST

டெல்லி: இப்போ இருக்குற பசங்க போக்கே தனி தான்! நிஜ காதலியை விட, AI  தலிகளையே இப்பொழுதைய 'ஜென் ஆல்பா' எனப்படும் டீன்-ஏஜ் பசங்க அதிகம் விரும்புறாங்களாம். இதைக் கேட்டா ஷாக்கிங்கா இருக்கா.. அப்படீன்னா நீங்க ஓரமாப் போய் நில்லுங்க.. மத்தவங்க வந்து இந்த செய்தியைப் படிங்க.


பிரிட்டனைச் சேர்ந்த 'மேல் அலைய்ஸ்' என்ற அமைப்பு நடத்தின ஆய்வில், 12 முதல் 16 வயசு வரை இருக்குற பசங்கள்ல 20% பேருக்கு 'AI காதலி' வச்சிருக்குற நண்பர்கள் இருக்காங்களாம். இன்னும் சொல்லப்போனா, 85% பசங்க ஏதோ ஒரு வகையில இந்த AI சாட்பாட்கள் கூட பேசிட்டு இருக்காங்களாம்.


பசங்க ஏன் AI-ஐ தேடி போறாங்கன்னு கேட்டா, அவங்க சொல்ற காரணங்கள் ரொம்ப லாஜிக்காதான் (அவங்க பார்வையில்) இருக்கு.


பசங்க சொல்லும் காரணங்கள் இதுதாங்க.. நிஜப் பொண்ணுங்க கூட பேசுறப்போ வர்ற தயக்கம், சண்டை எதுவுமே இங்க இல்ல. நாம என்ன சொன்னாலும் இந்த AI காதலிகள் பொறுமையா கேத்துக்குறாங்க. அதாவது சொல் பேச்சு கேட்கும் காதலிகளாக இவற்றைப் பார்க்கிறார்கள் பசங்க.




நாம என்ன பேசுறோம், எப்படிப் பேசுறோம் அப்படிங்கிற முழு கண்டரோலும் பசங்க கையிலேயே இருக்குறதுனால அவங்களுக்கு இது ரொம்ப ஈஸியா இருக்காம். மேலும் தங்களுக்கேற்றவாறு ஏஐ காதலிகளை ரியாக்ட் செய்ய வைக்கவும் முடிவது இவர்களுக்கு வசதியா இருக்காம்.


வழக்கமான பெண்கள் திடீர்னு மூட் அவுட் ஆகிட்டாலோ அல்லது வேற ஏதாவது வேலை குறுக்கிட்டாலோ, ஸாரி டா புஜ்ஜி பையா.. இன்னிக்கு பிளான் கேன்சல்.. இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, ஈஸியா கேன்சல் பண்ணிட்டுப் போய்ருவாங்க..  பசங்க மனசு கிடந்து அடித்துக் கொள்வதைப் பார்க்கவே சகிக்காது. அவ்வளவு பெயின் அது! ஆனா AI அப்படி இல்லை; எப்ப கூப்பிட்டாலும் 'உடனே' ரிப்ளை பண்ணும்.


இப்படி ஏகப்பட்ட காரணங்களை இந்த பசங்க அடுக்கிட்டே போறாங்க. ஆனால் பெற்றோர்களுக்கு இது ஒரு புது தலைவலியா மாறியிருக்கு. பசங்க இப்படி டெக்னாலஜி கூடவே அதிக நேரம் செலவிடுறதுனால, நிஜ உலகத்துல மத்தவங்க கூட பழகும் திறமை குறைஞ்சு போகுதுன்னு நிபுணர்கள் கவலைப்படுறாங்க.


இன்னொரு பக்கம், 'AI காதலிகள்' எப்பவுமே நாம சொல்றதுக்கு ஆமாம் சாமி போடுறதுனால, பசங்களுக்கு நிஜ வாழ்க்கையில இருக்குற சவால்களை எதிர்கொள்ளத் தெரியாம போயிடும்னு எச்சரிக்கிறாங்க. நிஜமான பெண்களுடன் பழகும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லாமல் போய் விடும் அபாயமும் உள்ளது. இது இயல்பான தாம்பத்ய உறவுக்கும், காதல் உணர்வுக்கும், அன்பை உணர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பு இல்லாமல் செய்து விடும் அபாயமும் உள்ளது.


மொத்தத்துல, இந்த ஜென் ஆல்பா பசங்க நிஜக் காதலில் இருக்குற அந்த 'சின்ன சின்ன சண்டை, சமாதானம்' இதையெல்லாம் விட, மொபைலுக்குள்ள இருக்குற சாட்பாட் கூட பேசுறதையே ரொம்ப 'கம்ஃபர்டபிளா' நினைக்கிறாங்க போல!


இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ முருகேசா!