கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!

Su.tha Arivalagan
Dec 02, 2025,01:06 PM IST

- சகாயதேவி


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை புதன்கிழமை எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு மழை அல்லது புயல் காரணம் அப்படின்னு நினைக்காதீங்க. இது வேற காரணத்துக்கான லீவுங்க.


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை விடுமுறை விடுவதற்கான காரணம், அந்த மாவட்டத்தில் மிகப் பிரபலமாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா. அந்த திருவிழா என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 


கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயமான கோட்டாறு புனித சவேரியார் திருத்தல பெருவிழா எல்லா வருடமும் நவம்பர் இறுதியில் தொடங்கி டிசம்பர் 3 அன்று முடிவு வரும். அந்த பெருந்திருவிழா காரணமாகவே புதன்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது .


சரி இப்பொழுது இந்த ஆலயம் எங்கு அமைந்து இருக்கிறது என்று பார்க்கலாமா? கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையமான கோட்டாறு ரயில்வே ஸ்டேஷன் மிக  அருகாமையிலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது. நடந்து செல்லும் தூரத்திலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது. கன்னியாகுமரி பக்கம் சென்றால் இந்த ஆலயத்தை தவறாமல் தரிசியுங்கள்.


ஆலயத்தின் சிறப்பு: 




ஒவ்வொரு ஆலயத்துக்கும் தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில், இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்று பார்த்தால் இந்த திருவிழாவில் கிறிஸ்தவ மக்கள் கூட்டத்தை மட்டும் பார்க்க முடியாது. இந்து மக்கள், முஸ்லிம் மக்கள் என அனைத்து மத மக்களையும் இந்த திருவிழா கூட்டத்தில் சாரை சாரையாக பார்க்க முடியும். இந்த ஆலயம் ஒரு புனித ஸ்தலமாகவும் எல்லா மக்களும் நம்பிக்கையோடு செல்லும் இடமாகவும் காலம் காலமாக அந்த ஊரில் இருந்து வருகிறது. 


கன்னியாகுமரி மாவட்டத்தின் மத ஒற்றுமையை காட்டும் சிறந்த அடையாளமாக இந்த கோட்டாறு சவேரியார் ஆலயத்தை சொல்லலாம்.


புனித பிரான்சிஸ் சேவியர் கதீட்ரல், தற்போது நாகர்கோவிலின் புறநகர்ப் பகுதியான கோட்டாரில் அமைந்துள்ளது, இது ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான வணிக மையமாக இருந்தது. இது இந்தியாவின் பிரபலமான யாத்திரை மையங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.


கோவாவிற்கு அடுத்தபடியாக, புனித பிரான்சிஸ் சேவியரின் அழியாத உடல் வைக்கப்பட்டுள்ள கோட்டாரில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் கதீட்ரல், புனித பிரான்சிஸ் சேவியரின் நினைவாக புகழ்பெற்ற புனித யாத்திரை மையமாகும். இங்கு சாதி, மதம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் புனித பிரான்சிஸ் சேவியர் கதீட்ரலுக்கு வந்து வழிபடுகிறார்கள். இங்கு வரும் யாத்ரீகர்கள் புனித சேவியரிடம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கிறார்கள்


திருவிழாக்கடைகள் திருவிழா என்று சொல்லியாயிற்று. கடைகள் இல்லாமல் வரிசை வரிசையாய் கடைகள் சாரை சாரையாய் போலீஸ் சாரை சாரையாய் கடைகள் இரவு நேரத்தில் இந்த பத்து நாட்களும் கோட்டாறு நகரில் போக்குவரத்துகள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும். பேருந்துகள் திசை மாற்றி அனுப்பப்பட்டிருக்கும். சாரை சாரையாய் கடைகள். .சுடச்சுட தேன் மிட்டாய் ..தேன்குழல்.  சுடச்சுட அனைத்து தின்பண்டங்களும் தயார் செய்யப்பட்டு விற்கப்படும் அதை அள்ளிக் கொண்டு வரலாம் .

கூடவே கோயிலின் சிறப்பு இந்த கோயிலின் வாசலில் விற்கப்படும் உப்பு மெழுகுவர்த்தி இந்த இரண்டையும் மக்கள் மிக நம்பிக்கையோடு வாங்கி இந்த உப்பை தங்கள் மேல் தடவி காணிக்கையாக செலுத்துகின்றனர். இப்படி காணிக்கையாக செலுத்தும் போது தங்கள் உடல் நோயிலிருந்து விடுதலை பெறுவதாக நம்புகிறார்கள்.


நீங்களும் கன்னியாகுமரி பக்கம் போனா கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியின் அழகை தரிசிக்கும் போது ரயிலில் பயணிக்கும் போது வாய்ப்பிருக்கும் போது கட்டாயம் இந்த ஆலயத்தை தரிசியுங்கள் நன்றி இன்றைய நாள் இனிதாய் அமையட்டும்


(சகாயதேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)