Greyshark.. பார்க்க அப்படியே பென்குவின் மாதிரியே இருக்கும்.. ஆனால் மேட்டரே வேறப்பா!

Su.tha Arivalagan
Nov 26, 2025,04:35 PM IST

- க.சுமதி


டெல்லி: பார்க்க பென்குவின் போலவே இருக்கும்.. கிட்டக்கப் போய் எட்டிப் பார்த்தால்தான் தெரிகிறது.. மேட்டரே வேற என்று. ஜெர்மனிக்காரர்கள் புதிய வகை தொழில்நுட்பத்துடன் உருவாக்கியிருக்கும் நீர்மூழ்கி டிரோன்கள்தான் இவை.


ஜெர்மன் நாட்டுத் தொழில் நுட்பத்தில் பயோனிக் முறையில்  உருவான அதிவேக நீர் மூழ்கி வாகனம்தான் இந்த கிரேஷார்க். பென்குவின்களை மாடலாக வைத்து உருவாக்கப்ப்டுள்ள டிரோன் இவை. பயோனிக் முறையில் இவற்றை வடிவமைத்துள்ளனர்.

 

இயற்கை அமைப்புகள் தாவரங்கள் விலங்குகள் போன்றவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் புதிய மாதிரிகளை உருவாக்குவது தான் பயோனிக் தொழில்நுட்பம். அதாவது ஆமை வடிவில் ரோபோட்களை செய்வது, அவற்றை உளவு பார்க்க பயன்படுத்துவது இப்படி.. செய்வதற்குப் பெயர்தான் பயோனிக் தொழில்நுட்பம்.




இந்த முறையை பயன்படுத்தி பென்குயின் வடிவத்தில் கிரேஷார்க் நீர் மூழ்கி வாகனம், யூரோ அட்லஸ், யூரோ லாஜிஸ்டிக் என்ற ஜெர்மன் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் படைப்பில் நீருக்கடியில் சிறப்பாக நீந்துவதற்கான வடிவமைப்பை ‌டால்ஃபின் பெற்றுள்ளது தான் இந்த வாகனம் டால்பின் வடிவம் பெற்றதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


கிரேஷார்க்,முற்றிலும் தன்னிச்சையாக நீருக்கடியில் அதிவேகத்துடன் நீண்ட தொலைவு பயணம் செய்யும்  ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கக்கூடிய நீர்மூழ்கி வாகனம் ஆகும். உக்ரைன்  இஸ்ரேலுக்கு இடையே போர் நடைபெற்று வரும் இந்த காலகட்டத்தில் பால்டிக் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆழ்கடல் கண்காணிப்பு பணியில் கிரேஷார்க்  முக்கிய பங்காற்ற உள்ளது.


இந்த ரோந்து டிரோன் ஆனது, நீருக்கடியில் மாதக் கணக்கில் கூட இருக்க முடியும். அந்த அளவுக்கு இதன் தொழில்நுட்பம் மிகவும் நுனுக்கமாகவும் நவீனமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


(க.சுமதி, தென்தமிழ் இணையதளம் மற்றும் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)