10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.31% மாணவர்கள் தேர்ச்சி.. வழக்கம் போல மாணவிகளே முதலிடம்!
சென்னை: தமிழகத்தில் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.31% ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள்: 8,70,643
மாணவிகள்: 4,35,247
மாணவர்கள்: 4,35,396
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள்: 8,21,105 (94.31%)
வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவிகள்: 4,19,891 (96.47%)
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 4,01,214 (92.15%)
மாணவர்களை விட மாணவிகள் 4.32% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சி:
கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் (தேர்ச்சி விகிதம்: 93.80%).
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.51% அதிகரித்துள்ளது மாணவர்களிடையேயும் கல்வித்துறையிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.