இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

Su.tha Arivalagan
Dec 22, 2025,04:22 PM IST

சென்னை: டிசம்பர் 22 தேதியான இன்று, தங்கத்தின் விலை சென்னையில் ரூ.640 உயர்ந்து, ஒரு சவரனுக்கு ரூ. 99,840 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ. 12,480 ஆகவும் ஆனது. கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.1 லட்சத்தை தொட்ட ஒரு சவரன் தங்கம் விலை, சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கி வருகிறது.


இந்த விலை உயர்வு, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைத்ததாலும், அடுத்த ஆண்டு மேலும் குறைக்கும் என அறிவித்ததாலும் ஏற்பட்டது. இதனால் டாலரின் மதிப்பு குறைந்து, உலகளவில் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளின் தேவை அதிகரித்தது. மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் உள்நாட்டு தங்க விலையை உயர்த்தியது.




முன்னதாக, டிசம்பர் 20 அன்று, ஒரு சவரன் தங்கம் ரூ. 99,200 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 12,400 ஆகவும் இருந்தது. இது முந்தைய நாளை விட ரூ. 20 அதிகரிப்பு. இந்த ஆண்டு தங்கத்தின் உச்சபட்ச விலையாக டிசம்பர் 15 அன்று ஒரு சவரன் ரூ. 1,00,120 ஆக பதிவானது. அக்டோபர் 17 அன்று, தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 97,600 (ஒரு கிராமுக்கு ரூ. 12,200) என்ற முந்தைய ஆண்டு உச்சத்தை எட்டியிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில், ஜனவரி 1 அன்று, ஒரு சவரன் தங்கம் ரூ. 57,200 (ஒரு கிராமுக்கு ரூ. 7,150) ஆக இருந்தது. டிசம்பர் 22 அன்று, அதன் விலை ரூ. 99,840 ஆக உயர்ந்துள்ளது. இது ரூ. 42,640 அதிகரிப்பு ஆகும். அதாவது, சுமார் 74.5% விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 


தங்கத்தைப் போலவே, வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 5 உயர்ந்து, ரூ. 231 ஆக விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,31,000 ஆக உள்ளது. இந்த ரூ. 231 என்ற விலை, இந்த ஆண்டு வெள்ளி கண்டிராத உச்சபட்ச விலையாகும்.


கடந்த ஐந்து நாட்களில் தங்கத்தின் விலை (22-கேரட்) நிலவரம்:

டிசம்பர் 20, 2025: ஒரு சவரன் - ரூ. 99,200 | ஒரு கிராம் - ரூ. 12,400

டிசம்பர் 19, 2025: ஒரு சவரன் - ரூ. 99,040 | ஒரு கிராம் - ரூ. 12,380

டிசம்பர் 18, 2025: ஒரு சவரன் - ரூ. 99,520 | ஒரு கிராம் - ரூ. 12,440

டிசம்பர் 17, 2025: ஒரு சவரன் - ரூ. 99,200 | ஒரு கிராம் - ரூ. 12,400

டிசம்பர் 16, 2025: ஒரு சவரன் - ரூ. 98,800 | ஒரு கிராம் - ரூ. 12,350


கடந்த ஐந்து நாட்களில் வெள்ளியின் விலை நிலவரம்:

டிசம்பர் 20, 2025: ஒரு கிராம் - ரூ. 226

டிசம்பர் 19, 2025: ஒரு கிராம் - ரூ. 221

டிசம்பர் 18, 2025: ஒரு கிராம் - ரூ. 224

டிசம்பர் 17, 2025: ஒரு கிராம் - ரூ. 222

டிசம்பர் 16, 2025: ஒரு கிராம் - ரூ. 211