தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே.. அது உடம்புக்கு மட்டுமில்லீங்க.. மனசுக்கும் ரொம்ப அவசியம்!

Su.tha Arivalagan
Jul 01, 2025,12:56 PM IST

இன்றைய வாழ்க்கை முறை ரொம்ப பிஸியாக இருக்கு. நிறைய பேர், முக்கியமா இளைஞர்கள், வேலை, பார்ட்டி, இல்லன்னா தனிப்பட்ட விஷயங்களுக்காக தூக்கத்தை குறைச்சிக்கிறாங்க. ஆனா, தூக்கம் குறைஞ்சா உடம்புக்கு கெடுதல்னு அவங்களுக்கு தெரியறதில்ல. 

பெரியவங்களுக்கு குறைஞ்சது 7 மணி நேரம் தூக்கம் தேவை. ஆனா, சிலர் 5 மணி நேரத்துக்கும் குறைவா தூங்குறாங்க. இப்படி தூங்குனா தூக்கமின்மை வந்து, மனசுக்கும் உடம்புக்கும் கெடுதல் ஏற்படும். கவலை, கவனமின்மை, நாள்பட்ட நோய் எல்லாம் வர வாய்ப்பு இருக்குன்னு டாக்டர்ஸ் சொல்றாங்க.


தூக்கம் சரியா இல்லன்னா மனசு பாதிக்கப்படும். மனநிலை மாறும். நாள்பட்ட நோய் வர வாய்ப்பு இருக்கு. சரியா யோசிக்க முடியாது. ஞாபக மறதி வரும். கவலை, மனச்சோர்வு, கவனமின்மை எல்லாம் ஏற்படும். உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடும். இதனால Type 2 Diabetes, High BP, இதய நோய் மாதிரி metabolic பிரச்சனைகள் வரலாம். 


5-6 மணி நேரம் மட்டுமே தூங்குறவங்களுக்கு சீக்கிரமே இறப்பு வர 15% வாய்ப்பு இருக்கு. தூக்கம் சரியா இல்லன்னா விபத்துகள் நடக்கலாம். வண்டி ஓட்டும்போது தூக்கம் வந்தா ஆபத்து. ஞாபகம் குறையும், concentration இருக்காது. முழிச்சு முழிச்சு கண்ணு வீங்கி, கருவளையம் வரும்.




பெரியவங்களுக்கு 7 மணி நேரம் தூக்கம் தேவைன்னு ரிசர்ச்ல கண்டுபிடிச்சிருக்காங்க. உங்க தூக்கத்தை ஒரு டைரில எழுதி வைங்க. இல்லன்னா App யூஸ் பண்ணி தெரிஞ்சுக்கலாம். வயசு, பரம்பரை காரணங்களால தூக்கம் மாறுபடும். சின்ன குழந்தைகளுக்கும், டீன் ஏஜ் பசங்களுக்கும் நிறைய தூக்கம் தேவை. தூங்குற நேரம் மட்டும் முக்கியம் இல்ல. நல்ல தூக்கமும் முக்கியம். வயசுக்கு ஏத்த மாதிரி தூக்கம் மாறும்.


- 18 வயசுக்கு மேல: 7-8 மணி நேரம்

- 13-18 வயசு: 8-10 மணி நேரம்

- 6-12 வயசு: 9-12 மணி நேரம்

- 3-5 வயசு: 10-13 மணி நேரம்

- 1-2 வயசு: 11-14 மணி நேரம்


சரியா தூங்க என்ன பண்ணலாம்? உங்களுக்கு தூக்கம் வர கஷ்டமா இருந்தா, சில விஷயங்களை டெய்லி பண்ணுங்க.




நீங்க தினசரி படுத்துத் தூங்கும்  ரூம் கூலா, இருட்டா, சத்தமில்லாம இருக்கணும். Blackout Curtain யூஸ் பண்ணுங்க. நைட்ல நிறைய சாப்பிடாதீங்க. தூங்க போறதுக்கு 4 மணி நேரத்துக்கு முன்னாடி alcohol குடிக்காதீங்க.


TV, Mobile எல்லாத்தையும் தூங்குற ரூம்ல இருந்து வெளிய எடுத்துருங்க. தூங்க போறதுக்கு 30 நிமிஷத்துக்கு முன்னாடி எதையும் பார்க்காதீங்க.


டெய்லி உடற்பயிற்சி பண்ணுங்க. சத்தான சாப்பாடு சாப்பிடுங்க. தூங்க போறதுக்கு 10-12 மணி நேரத்துக்கு முன்னாடி Tea, Coffee குடிக்காதீங்க.


நம்முடைய கையில்தான் நமது தூக்கம் இருக்கு.. ஸோ, அதுக்கேத்த மாதிரி உங்களோட டெய்லி வாழ்க்கையை மாத்தி அமைங்க.. அதுதான் நல்லது. ஸோ, இன்னிக்கு என்ன பண்றீங்க.. சீக்கிரமே தூங்கப் போறீங்க.. சூப்பரா தூங்கறீங்க!