அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
சென்னை: அஜித் நடித்த குட் பேட் அட்லி திரைப்படத்திற்கு நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, சுனில், சிம்ரன், அர்ஜூன் தாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கோவை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், குமரி ஆனந்தன் தூய்மையான அரசியல்வாதி, நல்ல மனிதர். அவரின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள். கூலி படம் நல்ல போயிட்டு இருக்கு. ஆகஸ்ட் 14ம் தேதி வெளி வருகிறது.
ஜெயிலர் பாகம் 2 படப்பிடிப்பு நன்றாக செல்கிறது. ஜெயிலர் 2 ஆரம்பித்துள்ளோம். முடிப்பது எப்போது என்று தெரியாது. குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். காட் பிளஸ் யூ என்று தெரிவித்துள்ளார்.