சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி: 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை: மத்திய அரசு அரசாணை!

Meenakshi
Feb 26, 2026,06:05 PM IST

புது தில்லி: நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் மட்டுமே  எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் பெட்ரோல் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இனி நாடு முழுவதும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20 பெட்ரோல்) மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.


அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் கிடைப்பதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். எத்தனால் உற்பத்திக்காக கரும்பு, மக்காச்சோளம் மற்றும் உபரி தானியங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்தத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தப் பெரிதும் உதவும் என கருதப்படுகிறது.




மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் அந்நியச் செலாவணியில் ஆண்டுக்கு சுமார் ரூ. 30,000 கோடிக்கும் மேல் மிச்சப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் மட்டுமே  எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றவாறு (E20 Compliant) வடிவமைக்கப்பட்டுள்ளன. பழைய வாகனங்கள் வைத்திருப்பவர்கள் சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்து கொள்வது குறித்து ஆலோசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.