ஆனந்தம் அடைகிறது மனம்.... அனுபவத்தில்!

Su.tha Arivalagan
Dec 22, 2025,12:04 PM IST

- கலைவாணி ராமு


தாத்தா பாட்டி கவிதை

தாத்தா பாட்டி என்ற உறவே 

புனிதமான உறவின் வெளிப்பாடு....

தாய் அன்பிற்கு நிகரான அன்பை 

காட்டுபவள் தான் பாட்டி....

தந்தை புகட்டும் அறிவை 

அசாதாராணமாக கதைகளில் எளிதில் புரியவைப்பார் தாத்தா.... 

மகன் ,மகளுக்காக வாழ்ந்த நாட்களை விட

வசந்தமான வண்ணமயமான காலம் இந்த பொற்காலம்....

பேரக் குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து 

அவர்களின் இன் முகத்தை ரசிப்பதில் 

அலாதி பிரியமுள்ளவர்கள் தாத்தா,பாட்டிகள்.....




வீட்டின் சமையலறையில் 

சலிப்புடன் வேலை செய்கையில் 

பேரன் பேத்திகளுக்காக புதிய தின்பண்டங்கள் செய்ய 

சமையலறையில்  சந்தோஷத்தை உணர்ந்தவள் பாட்டி....

அவர்களை அள்ளி அரவனைத்து 

ஆனந்த முத்தமிடுவது 

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை 

நிறைவு செய்யும் ஆனந்தமாக..

அவர்களுடன் கை கோர்த்து நடக்கும் போது 

வானமும் வசமாகும் ....

அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகையில் 

ஆனந்தம்  அடைகிறது மனம்.... அனுபவத்தில்!


(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)